திருமணத்திற்கு பிறகு வற்புறுத்தி உறவில் ஈடுபடுவது பாலியல் வன்கொடுமை ஆகாது - நீதிமன்றம்

திருமணத்திற்கு பிறகு வற்புறுத்தி உறவில் ஈடுபடுவது பாலியல் வன்கொடுமை ஆகாது - நீதிமன்றம்
திருமணத்திற்கு பிறகு வற்புறுத்தி உறவில் ஈடுபடுவது பாலியல் வன்கொடுமை ஆகாது - நீதிமன்றம்
Published on

சட்டப்படி திருமணமான மனைவியை அவருக்கு விருப்பம் இல்லாமல் வற்புறுத்தி பாலியல் உறவில் ஈடுபடுவது திருமண பாலியல் வன்கொடுமை ஆகாது என அதிரடி கருத்தை முன்வைத்திருக்கிறது சத்தீஸ்கர் உயர் நீதிமன்றம்.

சத்தீஸ்கர் மாநில உயர் நீதிமன்றத்தில் பெண் ஒருவர் தனது கணவர்மீது திருமண பாலியல் வன்கொடுமை குறித்து வழக்குத் தொடர்ந்திருந்தார். அதனை விசாரித்த நீதிமன்றம்  சட்டப்படி திருமணமான மனைவியை அவருக்கு விருப்பம் இல்லாமல் வற்புறுத்தி பாலியல் உறவில் ஈடுபடுவது திருமண பாலியல் வன்கொடுமை ஆகாது என்று கூறியிருக்கிறது. எனினும், குற்றம்சாட்டப்பட்ட நபர்மீது இந்திய சட்டப்பிரிவு 377இன் கீழ் வழக்குப்பதிவு செய்ய உத்தரவிட்டிருக்கிறது.

நீதிபதி என்.கே. சந்திரவான்ஷி, தனது தீர்ப்பில் 375(2)க்கு விதிவிலக்காக, மனைவி 18 வயதுக்குகீழ் இருந்தாலொழிய திருமணத்திற்குப் பிறகு கணவன் வற்புறுத்தி பாலியல் உறவு வைத்துக்கொள்வது பாலியல் வன்கொடுமை குற்றமாக எடுத்துக்கொள்ளப் படமாட்டாது எனக் கூறியிருக்கிறார்.

அதேசமயம், குற்றவாளியின் ஆதிக்க நோக்கம் இயற்கைக்கு மாறான பாலியல் திருப்தியைப் பெறுவதாக இருந்தால் பிரிவு 377 -ன் கீழ் சாட்டப்பட்ட குற்றச்சாட்டுகள் தவறானது என்று கூறமுடியாது என்றும் நீதிமன்றம் குறிப்பிட்டது. இயற்கைக்கு எதிரான முறையில் பாலியல் உறவு ஏற்படுத்துவது பிரிவு 377 இன் கீழ் குற்றத்தையே குறிக்கும் என்று அந்த உத்தரவில் கூறப்பட்டுள்ளது.

மேலும் 498(ஏ), 34,376 மற்றும் 377 ஆகிய சட்டப்பிரிவுகளின் கீழ் அந்த வழக்கில் குற்றம்சாட்டப்பட்ட நபர்மீதும், 498(ஏ)இன் கீழ் அந்த நபரின் உறவினர்மீதும் வழக்குப்பதிவு நீதிமன்றம் உத்தரவிட்டு தீர்ப்பளித்திருக்கிறது.

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com