சத்தீஸ்கரில் முதற்கட்டமாக 20 தொகுதிகளில் வாக்குப்பதிவு: பலத்த பாதுகாப்பு

இரண்டு கட்டமாக சட்டமன்றத் தேர்தல் நடைபெற உள்ள சத்தீஸ்கர் மாநிலத்தில் முதல்கட்ட வாக்குப்பதிவு இன்று நடைபெற உள்ளது.
சத்தீஸ்கர் முதற்கட்ட வாக்குபதிவு
சத்தீஸ்கர் முதற்கட்ட வாக்குபதிவுபுதிய தலைமுறை
Published on

நாட்டில் நக்சல்கள் பாதிப்பு அதிகம் உள்ள மாநிலங்களில் சத்தீஸ்கரும் ஒன்று. 90 தொகுதிகளை கொண்ட இந்த மாநிலத்தில் முதல் கட்டமாக 20 தொகுதிகளுக்கு தேர்தல் நடைபெற உள்ளது. நக்சல்கள் பாதிப்பு அதிகம் உள்ள பிஜப்பூர் , தண்டேவாடா, நாராயண்ப்பூர், கன்கர் உள்ளிட்ட 12 மாவட்டங்கள் இதில் அடங்கியுள்ளன.

600-க்கும் மேற்பட்ட வாக்குச்சாவடி மையங்கள் இத்தகைய நக்சல் பாதிப்பு அதிகம் உள்ள பஸ்தர் வட்டார இடங்களில் அமைக்கப்பட்டுள்ளது. இங்கு சுமுகமாக தேர்தலை நடத்துவதற்காக மூன்று அடுக்கு பாதுகாப்பு போடப்பட்டுள்ளது. 20 தொகுதிகளில் 5,304 வாக்குச்சாவடிகள் அமைக்கப்பட்டுள்ளன.

40,000 மத்திய ஆயுத காவல் படையினர் மற்றும் 20,000 மாநில காவல்துறையினர் என மொத்தமாக 60,000 பாதுகாப்பு படை வீரர்கள் பாதுகாப்பு பணிகளில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர்.

சிறப்பு நக்சல் தடுப்புப்படையான கோப்ரா பிரிவும் களமிறக்கப்பட்டுள்ள நிலையில் ட்ரோன்கள் ஹெலிகாப்டர்கள் கொண்டு நக்சல்களின் நடமாட்டங்கள கண்காணிக்கப்பட்டு வருகிறது. தெலங்கானா, மகாராஷ்டிரா, ஒடிசா,சத்தீஸ்கர் ஆகிய மாநிலங்களின்எல்லைகளும் தீவிர கண்காணிப்புக்கு உட்படுத்தப்பட்டுள்ளது.

சத்தீஸ்கர் முதற்கட்ட வாக்குபதிவு
“அடேங்கப்பா.. இத்தன ரெய்டா” - IT, ED ரெய்டுகளால் எதிர்க்கட்சிகளை அச்சுறுத்துகிறதா பாஜக? - இதோ லிஸ்ட்

நக்சல்கள் பாதிப்பு உள்ள வாக்குச்சாவடிமையங்களில் காலை 7 மணி முதல் மாலை 3 மணி வரையிலும் மற்ற எட்டு தொகுதிகளுக்கு காலை 8 மணி முதல் மாலை 5 மணி வரையிலும் வாக்குப்பதிவு நடைபெற உள்ளது.

சத்தீஸ்கர் மாநிலத்தில் தற்போது காங்கிரஸ் ஆட்சி நடந்துவருகிறது. இங்கு காங்கிரஸ் மற்றும் பாஜக இடையில் நேரடி போட்டி நிலவுகிறது. சத்தீஸ்கர் ஜனதா காங்கிரஸ், பகுஜன் சமாஜ், ஆம் ஆத்மி கட்சிகளும் களத்தில் உள்ளன. மொத்தம் 25 பெண் வேட்பாளர்கள் உட்பட 223 பேர் களத்தில் இருக்கிறார்கள்.

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com