சத்தீஸ்கரில் எழுத, படிக்கத் தெரியாதவர் அமைச்சராக பதவியேற்பு

சத்தீஸ்கரில் எழுத, படிக்கத் தெரியாதவர் அமைச்சராக பதவியேற்பு
சத்தீஸ்கரில் எழுத, படிக்கத் தெரியாதவர் அமைச்சராக பதவியேற்பு
Published on

சத்தீஸ்கரில் காங்கிரஸ் கட்சியை சேர்ந்த அமைச்சர் ஒருவர் எழுத, படிக்க தெரியாமல் இருப்பது தெரியவந்துள்ளது.

சத்தீஸ்கரில் அண்மையில் நடைபெற்று முடிந்த சட்டப்பேரவைத் தேர்தலில் காங்கிரஸ் கட்சி வெற்றி பெற்றது. முதலமைச்சராக பூபேஷ் பாகல் பதவியேற்றுக் கொண்டார். இந்நிலையில் 2 பெண்கள் உள்பட 9 காங்கிரஸ் எம்எல்ஏக்கள் இன்று அமைச்சர்களாக பதவியேற்றுக் கொண்டனர். ஆளுநர் அனந்திபென் படேல் அமைச்சர்களுக்கு பதவிப் பிரமாணம் செய்து வைத்தார்.

பதவியேற்பின் போது கோண்டா தொகுதி எம்எம்ஏவான கவாசி லக்மா, தன் கையில் இருந்த தாளை பார்க்காமல் ஆளுநர் கூறியதைத் தான் அப்படியே கூறினார். இது ஏனென்றால் அவருக்கு பள்ளிக்கு சென்ற படிப்பறிவு கிடையாது. அத்துடன் எழுதவும் தெரியாது. இவர் கடந்த 2013-ஆம் ஆண்டு நடைபெற்ற நக்சல் தாக்குதலில் இருந்து உயிர்பிழைத்தவர் என்பது குறிப்பிடத்தக்கது.

இதுகுறித்து அவர் கூறும்போது, “ நான் மிகவும் ஏழை குடும்பத்தில் பிறந்தவன். நான் சிறுவயதில் இருந்து பள்ளிக்கே சென்றதில்லை. ஆனால் இந்தியாவின் மிகப் பெரிய கட்சியான காங்கிரஸ் எனக்கு தேர்தலில் போட்டியிட வாய்ப்பு கொடுத்தது. சமூகத்தில் அனைத்து தர மக்களும் என்னை விரும்புகின்றனர். நான் பள்ளிப் படிப்பிற்கு செல்லவில்லை என்றால் கூட இப்போது அமைச்சர்தான். என்னை போன்ற ஏழை மக்களின் முன்னேற்றத்திற்காக கடுமையாக உழைப்பேன்” என தெரிவித்துள்ளார்.

பழங்குடியின இனத்தை சேர்ந்த லக்மா, கோண்டா தொகுதியில் இருந்து கடந்த 1998-ஆம் ஆண்டு முதல் முறையாக எம்எல்ஏவாக தேர்வு செய்யப்பட்டார். பின்னர் 2003, 2008, 2013, 2018 ஆம் ஆண்டுகளிலும் எம்எல்ஏவாக தேர்வு செய்யப்பட்டார் என்பது குறிப்பிடத்தக்கது. தற்போது 9 அமைச்சர்கள் பதவியேற்றதன் மூலம் முதலமைச்சர் உள்பட 13 பேர் சத்தீஸ்கர் அமைச்சரவையில் உள்ளனர்.

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com