மாணவி பாலியல் வன்கொடுமை விவகாரம்: ’நான் அப்பாவி’ பிரின்சிபல் மறுப்பு

மாணவி பாலியல் வன்கொடுமை விவகாரம்: ’நான் அப்பாவி’ பிரின்சிபல் மறுப்பு
மாணவி பாலியல் வன்கொடுமை விவகாரம்: ’நான் அப்பாவி’ பிரின்சிபல் மறுப்பு
Published on

பீகார் மாணவியை 18 பேர் பாலியல் வன்கொடுமை செய்த வழக்கில் கைது செய்யப்பட்டுள்ள பிரின்சிபல் அதை மறுத்துள்ளார்.

பீகார் மாநிலம் சரன் மாவட்டத்தின் சப்ராவில் உள்ளது தீபேஷ்வர் கியான் நிகேதன் பள்ளி. இங்கு 9-ம் வகுப்பு படித்து வந்தார் சிறுமி ஒருவர். இவரது தந்தை கடந்த டிசம்பர் மாதம் சிறையில் அடைக்கப்பட்டிருந்தார். ஏழு மாதத்துக்குப் பிறகு சமீபத்தில் சிறையில் இருந்து வெளியே வந்தார். அப்போது அவரிடம் கதறி அழுத சிறுமி, சிறைக்குச் சென்ற பின், கடந்த ஏழு மாதங்களில் 18 பேர், தன்னை பாலியல் வன்கொடுமை செய்ததாகக் கூறினார். அதிர்ச்சி அடைந்த சிறுமியின் தந்தை விசாரித்தார்.

முதலில், உடன் படிக்கும் மாணவன் ஒருவன் மிரட்டி பாலியல் வன்கொடுமை செய்து அதை வீடியோ எடுத்துள்ளான். அதை மற்ற நண்பர்க ளுக்கு அனுப்பியுள்ளான். அதைப் பார்த்த அவர்களும், ’இதை வெளியே சொல்லாமல் இருக்க வேண்டும் என்றால்...’ என்று மிரட்டி பாலியல் வன்கொடுமை செய்துள்ளனர். அந்த வீடியோ பற்றி பிரின்சிபலிடம் புகார் கூறியுள்ளார் சிறுமி. விசாரித்து நடவடிக்கை எடுக்க வேண்டிய அவரும் உடன் பணியாற் றிய மேலும் இரு ஆசிரியர்களும் சேர்த்து சிறுமியை கூட்டுப் பாலியல் வன்கொடுமை செய்துள்ளனர். பின் அந்த வீடியோ அப்படியே மற்ற மாணவர்களுக்கும் பரவி மொத்தம் 18 பேர் அந்தச் சிறுமியை சீரழித்துள்ளனர். செய்வதறியாது திகைத்த அந்தச் சிறுமி இதை யாரிடம் சொல்வது என்று தினமும் தவித்திருக்கிறார். 

இதைக் கேட்டு கொதித்துப் போன அவளின் தந்தை போலீசில் புகார் கொடுத்தார். ஆனால் போலீசார் வழக்குப் பதிவு செய்யவில்லை. மேலதிகாரியிடம் புகார் கொடுக்கப் போவதாகக் கூறிய பின் வழக்குப் பதிவு செய்த போலீசார், விசாரணை நடத்தினர். அந்தச் சிறுமி, யார் யார் என்னென்ன செய்தார்கள் என்று ஒப்பித்தார். அந்த வாக்குமூலத்தின் அடிப்படையில் பிரின்சிபல் மற்றும் 2 ஆசிரியர்கள் உட்பட மொத்தம் 6 பேர் கைது செய்யப்பட்டனர். பள்ளியின் பிரின்சிபலும் ஆசிரியர்களும் சேர்ந்தே சிறுமியை சீரழித்த சம்பவம் அந்தப் பகுதியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. 

இந்நிலையில் அந்த பிரின்சிபல், தான் அப்பாவி என்று தெரிவித்துள்ளார். அவர் கூறும்போது, ‘இது பொய்யான புகார். இதற்காக எந்த விதமான சோதனைக்கும் தயாராக இருக்கிறேன். பள்ளியின் பெயரைக் கெடுக்க வேண்டும் என்பதற்காக இந்த புகாரை கொடுத்துள்ளனர். இதை சட்டப்படி சந்திப்போம்’ என்று தெரிவித்துள்ளார்.

பிகார் மாநில ஏடிஜி சஞ்சீவ் குமார் சிங்கால் கூறும்போது, ‘விசாரணை தொடர்ந்து நடந்துவருகிறது. இதுவரை 6 பேர் கைது செய்யப்பட்டுள் ளனர். மற்றவர்களை கைது செய்ய சிறப்புப் படை அமைக்கப்பட்டுள்ளது’ என்றார். 

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com