புதுச்சேரி சபாநாயகருக்கு நெஞ்சுவலி: அரசு மருத்துவமனையில் தீவிர சிகிச்சை

புதுச்சேரி சபாநாயகருக்கு நெஞ்சுவலி: அரசு மருத்துவமனையில் தீவிர சிகிச்சை
புதுச்சேரி சபாநாயகருக்கு நெஞ்சுவலி: அரசு மருத்துவமனையில் தீவிர சிகிச்சை
Published on

புதுச்சேரியில் சட்டப்பேரவை நிகழ்வுகளில் பங்கேற்க வந்த சபாநாயகருக்கு திடீர் நெஞ்சுவலி ஏற்பட்டதால் புதுச்சேரி அரசு தலைமை மருத்துவமனை ஐசியூவில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

புதுச்சேரி சட்டப்பேரவையில் பட்ஜெட் கூட்டத்தொடர் நடந்து வருகிறது. 4ஆம் நாள் நிகழ்வுகளில் பங்கேற்க வந்த சபாநாயகர் செல்வதின் கார் பேரவைக்குள் வராமல் வெளியே போனது. இதைடுத்து பேரவைக்கு வந்த சபாநாயகர் செல்வம் அருகிலுள்ள அரசு மருத்துவமனைக்கு சென்ற நிலையில் ஐசியூவில் அனுமதிக்கப்பட்டார்.

சபாநாயகர் செல்வத்திற்கு திடீரென்று மூச்சுவிடுவதில் சிரமம் ஏற்பட்டு, நெஞ்சு வலிப்பதாகவும் குறிப்பிட்டார். இதையடுத்து அருகிலுள்ள அரசு தலைமை மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். அதைத் தொடர்ந்து அவரை டாக்டர்கள் பரிசோதித்து தீவிர சிகிச்சை பிரிவில் அனுமதித்து கண்காணித்து வருகின்றனர்.

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com