செஸ் ஒலிம்பியாட் 2022: வெளியானது பிரதமர் மோடியின் 2 நாள் சென்னை பயணத்திட்டம்

செஸ் ஒலிம்பியாட் 2022: வெளியானது பிரதமர் மோடியின் 2 நாள் சென்னை பயணத்திட்டம்
செஸ் ஒலிம்பியாட் 2022: வெளியானது பிரதமர் மோடியின் 2 நாள் சென்னை பயணத்திட்டம்
Published on

செஸ் ஒலிம்பியாட் போட்டியை தொடங்கி வைக்க சென்னைக்கு வரும் பிரதமர் நரேந்திர மோடியின் 2 நாள் பயண விவரத் திட்டம் வெளியிடப்பட்டுள்ளது.

அதன்படி பிரதமர் நநேரத்திர நாளை (ஜூலை 28) பிற்பகல் 2.20 மணிக்கு குஜராத் மாநிலம் அகமதாபாத்திலிருந்து விமானப்படை விமானத்தில் புறப்பட்டு மாலை 4.45 மணிக்கு சென்னை விமானநிலையத்திற்கு வந்து சேருகிறார். பின்னர் அங்குள்ள ஓய்வறையில் சிறிது நேரம் தங்கி ஓய்வெடுக்கும் அவர், 5.25 மணிக்கு விமானப்படை ஹெலிகாப்டரில் புறப்பட்டு, 5.45 மணிக்கு அடையாரில் உள்ள இந்திய விமானப்படை ஹெலிகாப்டர் தளத்தில் தரையிறங்குகிறார். அங்கிருந்து சாலை வழியாக ஜவஹர்லால் நேரு உள்விளையாட்டரங்கிற்குச் செல்லும் மோடி, 6 மணி முதல் 7.30 வரை நடைபெறும் 44ஆவது செஸ் ஒலிம்பியாட் விழாவை தொடங்கி வைக்கிறார்.

அதனைத் தொடர்ந்து இரவு 7.35 மணிக்கு காரில் பயணம் மேற்கொண்டு, 7.50க்கு கிண்டியில் உள்ள ஆளுநர் மாளிகையை சென்றடைகிறார். அன்றிரவு ஆளுநர் மாளிகையில் தங்கி ஓய்வெடுக்கும் பிரதமர், மறுநாள், அதாவது 29ஆம் தேதி காலை 9.55 மணிக்கு அங்கிருந்து புறப்பட்டு சாலை வழியாக 10 மணிக்கு அண்ணா பல்கலைக்கழகத்திற்குச் செல்கிறார். அங்கு நடைபெறும் 42ஆவது பட்டமளிப்பு விழாவில் பங்கேற்றுவிட்டு, காலை 11.35 மணிக்கு காரில் புறப்பட்டு 11.50-க்கு விமானநிலையத்திற்கு செல்கிறார்.

சென்னை விமான நிலையத்திலிருந்து 11.55 மணிக்கு விமானப்படை விமானம் மூலம் புறப்படும் பிரதமர் மோடி, பிற்பகல் 2.15க்கு குஜராத்திற்கு திரும்புகிறார்.

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com