இந்தியாவில் பெண்களுக்கு வேலைவாய்ப்புகளை வழங்குவதில் சிறந்த நகரமாக சென்னை தேர்வாகியுள்ளது என டிஇஐ (DEI) தெரிவித்துள்ளது.
பன்முகத்தன்மை, சமபங்கு, உள்ளடக்கம் ஆகியவற்றின் இந்தியாவின் முன்னோடி நிறுவனமான அவதார் குழுமம் (DEI) வெளியிட்டுள்ள தரவுகளின் அடிப்படையில், இந்த பட்டியல் வெளியிடப்பட்டுள்ளது. அவதார் நிறுவனம் கடந்த 5ஆம் தேதி ‘இந்தியாவில் பெண்களுக்கான சிறந்த நகரங்கள்’ அறிக்கையை வெளியிட்டது. 111 நகரங்களை உள்ளடக்கிய இந்த பட்டியலில் சமூக மற்றும் தொழில்துறை, பெண்களுக்கு உகந்த சுற்றுச்சூழல் அமைப்பை வழங்கும் அடிப்படையில் இந்த பட்டியல் வெளியிடப்பட்டுள்ளது.
அதாவது, பெண்கள் தற்போதைய எளிதான வாழ்க்கைக் குறியீடு, PLFS, தேசிய மக்கள்தொகைக் கணக்கெடுப்பு, குற்றப் பதிவுகள், NFHS, பெண்கள் மற்றும் குழந்தைகள் மேம்பாட்டு அமைச்சகத்தின் ஆண்டறிக்கை உட்பட 200க்கும் மேற்பட்ட தரவுகளின் ஒருங்கிணைப்பாக இந்த அறிக்கை வெளியாகி உள்ளது.
இதில், சென்னைக்கு அடுத்து புனே, பெங்களூரு, ஹைதராபாத், மும்பை ஆகிய நகரங்கள் உள்ளன. டெல்லி, சென்னையைவிட 30 புள்ளிகள் குறைவாக பெற்று 14வது இடத்தைப் பிடித்துள்ளது.
அவதாரின் இந்தியாவின் பெண்களுக்கான சிறந்த நகரங்கள் அறிக்கையின்படி, 111 நகரங்களில் ஒன்பது நகரங்கள் மட்டுமே தங்கள் நகரங்களை உள்ளடக்கிய மதிப்பெண்களில் 50க்கு மேல் மதிப்பெண் பெற்றுள்ளன. இந்தியாவில் பெண்களுக்கான சிறிய நகரங்கள் அறிக்கையின்படி முதல் 10 நகரங்களில் 8 தமிழக நகரங்கள் இடம் பிடித்துள்ளன.
அதில் திருச்சி, வேலூர், ஈரோடு, சேலம், திருப்பூர் உள்ளிட்ட நகரங்கள் முதல் 5 இடங்களில் உள்ளன. ஒவ்வொரு பிராந்தியத்திற்கும் சராசரி மதிப்பெண்களை ஒப்பிட்டுப் பார்த்தால், தெற்குப் பகுதி மேற்கு நாடுகளை தொடர்ந்து முதலிடத்தில் உள்ளது.
அவதார் வெளியிட்டிருக்கும் அறிக்கையின் முழு தகவலை பெற இங்கே க்ளிக் செய்யவும்.. https://avtarinc.com/wp-content/uploads/2023/01/Viewport-2022-Top-cities-for-Women-in-India..pdf
- ஜெ.பிரகாஷ்