ஜெயந்திலால் சலானி
ஜெயந்திலால் சலானிகூகுள்

தங்கத்தின் விலை மேலும் குறையுமா... நகை வியாபாரிகளின் தலைவர் சொல்வதென்ன?

சென்னையில் ஆபரணத்தங்கத்தின் விலை சவரன் 1,320 ரூபாய் குறைந்து ரூ.57,600 க்கு விற்பனை ஆகிறது.
Published on

சென்னையில் ஆபரணத்தங்கத்தின் விலை சவரன் 1,320 ரூபாய் குறைந்து ரூ.57,600 க்கு விற்பனை ஆகிறது.

இந்தியாவில் கடந்த சில மாதங்களாகவே தங்கத்தின் விலை தொடர்ந்து அதிகரித்து வந்தது. இந்நிலையில், சில மாதங்களுக்கு முன்பு வெளியான மத்திய அரசின் பட்ஜெட்டில் தங்கத்தின் மீதான இறக்குமதி வரி குறைக்கப்பட்டதால் விலை சற்று குறைந்தது.

மேலும், தங்கத்தின் விலை குறையும் என எதிர்பார்த்து காத்திருந்தவர்களுக்கு அதிர்ச்சி காத்திருந்தது. அடுத்த சில வாரங்களிலேயே விலைப்படிப்படியாக உயர்ந்து செப்டம்பர் மாதம் ரூ 56 ஆயிரத்தையும், அதன்பின்னர் ஏற்ற இறக்கத்துடன் ரூ 57 ஆயிரத்தையே தொட்டுவிட்டது. இதன் மூலம் , தங்கத்தின் விலை வரலாறு காணாத உச்சத்தையே தொட்டது. அமெரிக்க தேர்தலுக்கு முன்பு ஒரு சவரன் 59000 என்னும் இமாலய இலக்கைத் தொட்டது.

இந்நிலையில், சென்னையில் இன்று (நவம்பர் 7) 22 கேரட் ஆபரணத் தங்கம் பவுனுக்கு ரூ.1,320 என விலைக் குறைந்து, ஒரு பவுன் ரூ.57,600-க்கு விற்பனை ஆகிறது. அதன்படி, கிராமுக்கு ரூ.165 குறைந்து ரூ.7,200-க்கு விற்பனையாகிறது. நேற்றைய தினம் பவுனுக்கு ரூ.80 என அதிகரித்திருந்தது குறிப்பிடத்தக்கது.

மேலும், 24 கேரட் தங்கத்தின் விலையும் ஒரு கிராம் ரூ,8,040 க்கும் ஒரு சவரன் ரூ.64,320க்கும் விற்பனை செய்யப்படுகிறது. இதே போல, வெள்ளி விலை கிராமுக்கு ரூ.3 குறைந்துள்ளது..ஒரு கிராம் ரூ.102-க்கு விற்பனை ஆகிறது.

தங்கம் விலை குறித்து, சென்னை தங்கம் வைரம் வியாபாரிகள் சங்க தலைவர் ஜெயந்திலால் சலானி கூறுகையில்,

அமெரிக்க அதிபராக டொனால்ட் ட்ரம்ப் வெற்றி பெற்றுள்ள நிலையில் தொழில் துறையில், முதலீட்டாளார்கள் அதிக முதலீடுகள் ஏற்பட வாய்ப்பு இருக்கிறது அந்த அடிப்படையில் இன்னும் சில தினங்களுக்கு தங்கம் கிராமிற்கு நூறு ரூபாய் அளவில் குறைய வாய்ப்பு இருக்கிறது... ”என்று கூறியுள்ளார்.

மேலும், அமெரிக்காவில் டொனால்ட் ட்ரம்ப் அதிபராக பொறுப்பேற்றதால், கடந்த சில மாதங்களாக சரிந்திருந்த பங்கு சந்தையானது மீண்டும் உயர வாய்ப்பு உள்ளது. ஆகையால் முதலீட்டாளர்கள் தங்கத்தின் மீது முதலீடு செய்வதைக்குறைத்து பங்கு சந்தைகளில் முதலீடு செய்யத்தொடங்கியதால், தங்கத்தின் விலை குறைந்துள்ளது.

இருப்பினும் ட்ரம்ப்பின் நிலைப்பாடு என்ன? அவருடைய கொள்கைகள் என்ன? 2017ல் இவரது ஆட்சியில் வட்டி விகிதங்களின் அளவு குறைக்கப்பட்டது போல் இந்த முறையும் வட்டி விகிதமானது குறைக்கப்படுமா? என்று மக்கள் எதிர்ப்பார்த்து வருகின்ற நிலையில், இது குறித்த அறிவிப்புகள் இன்னும் வெளியாகவில்லை. அது வெளிவந்தால் தங்கத்தின் விலையில் மாற்றம் ஏற்படலாம். மீண்டும் உச்சநிலையை அடைவதற்கு வாய்ப்பு இருக்கிறது என்று கூறப்படுகிறது.

இன்றைய பங்கு சந்தை

நேற்று நிப்ட்டி 200 புள்ளிகள் வரை அதிகரித்த பங்குசந்தையானது 24484 புள்ளிகளில் முடிவடைந்திருந்தது. இன்று நிப்ட்டியானது 24489 புள்ளிகளில் தொடங்கிய நிலையில், 270 புள்ளிகள் வரை சரிந்து 24204 புள்ளிகளில் வர்த்தகமாகி வருகிறது.

பங்கு சந்தை
பங்கு சந்தைபுதிய தலைமுறை

அதே போல் சென்செக்ஸ் நேற்று 80378 புள்ளிகளில் முடிவடைந்த நிலையில் இன்று 80563 புள்ளிகளில் வர்த்தகமானது துவங்கியது. அதன்படி 845 புள்ளிகள் சரிவடைந்து 79532 புள்ளிகளில் தற்பொழுது பங்கு சந்தையானது வர்த்தகமாகி வருகிறது.

X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com