சந்திராயன் இரண்டுக்கான பணிகள் தீவிரமாக நடைபெற்று வருவதாக விஞ்ஞானி மயில்சாமி அண்ணாதுரை தெரிவித்துள்ளார்.
செவ்வாய் கிரக ஆய்வுக்கு மீண்டும் ஒரு முயற்சியாக சந்திரயான்-2 திட்ட பணிகளும் நடைபெற்று வருகின்றன. புதிய தொழில் நுட்பத்தில் எடை குறைவான ‘சந்திராயன்-2’ விண்கலம் விஞ்ஞானிகளால் உருவாக்கப்பட்டு வருகிறது. இது நிலவில் தரையிறங்கி அங்குள்ள நீர்நிலைகள், மலைகள், நிலங்கள், வளங்கள், பருவ நிலைகள் குறித்த தகவல்களை உடனுக்குடன் புகைப்படமாக அனுப்பும்.
இத்தகைய ‘சந்திராயன்-2’ விண்கலம் இந்த ஆண்டு இறுதியில் அல்லது அடுத்த ஆண்டு தொடக்கத்தில் விண்ணில் ஏவப்பட்டு, நிலவில் தனது ஆய்வைத் தொடங்கும் என்று மயில்சாமி அண்ணாதுரை தெரிவித்துள்ளார்.