ஆந்திர தேர்தல்: சந்திரபாபு நாயுடு பின்னடைவு, ஒய்எஸ்ஆர் காங்கிரஸ் முன்னிலை!

ஆந்திர தேர்தல்: சந்திரபாபு நாயுடு பின்னடைவு, ஒய்எஸ்ஆர் காங்கிரஸ் முன்னிலை!
ஆந்திர தேர்தல்: சந்திரபாபு நாயுடு பின்னடைவு, ஒய்எஸ்ஆர் காங்கிரஸ் முன்னிலை!
Published on

ஆந்திர மாநில சட்டப்பேரவைத் தேர்தலில் ஒய்எஸ்ஆர் காங்கிரஸ் கட்சி முன்னிலை பெற்றுள்ளது. குப்பம் தொகுதியில் சந்திரபாபு நாயுடு பின்னடைந்துள்ளார்.

மக்களவைத் தேர்தலுக்கு கடந்த ஏப்ரல் 11- ஆம் தேதி தொடங்கி கடந்த 19- ஆம் தேதி வரை ஏழு கட்டங்களாக தேர்தல் நடைபெற்றது.மொத்தம் உள்ள 543 தொகுதிகளில்  வேலூர் தொகுதி தவிர, 542 தொகுதிகளுக்கு வாக்குப்பதிவு நடந்தது. தமிழகத்தில் 38 மக்களவைத் தொகுதிகளுக்கும், காலியாக உள்ள 22 சட்டப்பேரவைத் தொகுதிகளுக்கும் தேர்தல் நடந்தது. அத்துடன் ஆந்திரா, ஒடிசா, அருணாசல பிரதேசம், சிக்கிம் ஆகிய 4 மாநில சட்டப்பேரவைகளுக்கும் தேர்தல் நடந்துள்ளது. இன்று காலை வாக்கு எண்ணிக்கைத் தொடங்கியது. இந்தியா முழுவதும் பாஜக அதிக இடங்களில் முன்னிலைப் பெற்றுள்ளது.

இந்நிலையில் ஆந்திரபிரதேச மாநில சட்டப்பேரவைத் தேர்தலில் ஒய்எஸ்ஆர் காங்கிரஸ் கட்சி 79 இடங்களில் முன்னிலை பெற்றுள்ளது. அந்தக் கட்சி அங்கு ஆட்சியை பிடிக்கும் என்று தெரிகிறது. தெலுங்கு தேசம் கட்சி 18 இடங்களில் முன்னிலை வகிக்கிறது. முதலமைச்சர் சந்திரபாபு நாயுடு, தான் போட்டியிட்ட குப்பம் தொகுதியில் பின்னடைந்துள்ளார். 

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com