பாஜகவில் ‘ஜார்கண்ட் புலி’: கலக்கத்தில் JMM.. பதவியேற்ற புதிய அமைச்சர்...ஜார்க்கண்டில் நடப்பது என்ன?

ஜூலை 3-ஆம் தேதி சம்பாய் சோரன் தனது பதவியை ராஜினாமா செய்த நிலையில், ஜூலை 4-ஆம் தேதி ஹேமந்த் சோரன் ஜார்க்கண்ட் முதலமைச்சராக முதலமைச்சராக பொறுப்பேற்றார்.
சம்பாய் சோரன், ஹேமந்த் சோரன், ஷிபு சோரன்
சம்பாய் சோரன், ஹேமந்த் சோரன், ஷிபு சோரன்pt web
Published on

பதவி விலகிய சம்பாய் சோரன் 

ஜார்க்கண்ட் முதலமைச்சராக இருந்த ஹேமந்த் சோரன் சிறைக்கு சென்றபோது, ஜார்கண்ட் முக்தி மோர்ச்சா கட்சியின் முக்கியத் தலைவராக இருந்த சம்பாய் சோரன் முதலமைச்சர் பொறுப்பை ஏற்றார். 5 மாதங்கள் முதலமைச்சராக பதவிவகித்த அவர், ஹேமந்த் சோரன் சிறையில் இருந்து வெளியே வந்த பின்னர் முதலமைச்சர் பதவியில் இருந்து விலக வேண்டியிருந்தது. அதாவது, ஜூலை 3-ஆம் தேதி சம்பாய் சோரன் தனது பதவியை ராஜினாமா செய்த நிலையில், ஜூலை 4-ஆம் தேதி ஹேமந்த் சோரன் ஜார்க்கண்ட் முதலமைச்சராக முதலமைச்சராக பொறுப்பேற்றார்.

ஹேமந்த் சோரன்
ஹேமந்த் சோரன்

அப்போது நடந்த சில சம்பவங்கள் மற்றும் விஷயங்கள் தன்னை காயப்படுத்தியதாக சம்பாய் சோரன் சமீபத்தில் தெரிவித்திருந்தார். இது ஜார்க்கண்ட் அரசியலில் பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியிருந்த நிலையில், ஆகஸ்ட் 28-ஆம் தேதி ஜார்க்கண்ட் முக்தி மோர்ச்சா கட்சியின் முதன்மை உறுப்பினர் உள்பட அனைத்து பொறுப்புகளில் இருந்து விலகுவதாக சம்பாய் சோரன் அறிவித்தார். அதேபோல் ஜார்கண்ட் சட்டப்பேரவையின் உறுப்பினர் மற்றும் அமைச்சர் உள்ளிட்ட பதவிகளில் இருந்தும் விலகினார்.

சம்பாய் சோரன், ஹேமந்த் சோரன், ஷிபு சோரன்
கள்ளக்குறிச்சி விஷச்சாராய மரணங்கள்... “வழக்கை சிபிஐக்கு மாற்றுவதால் எந்த பயனும் இல்லை”- தமிழக அரசு

பாஜகவில் இணைந்த சம்பாய் சோரன்

இதுதொடர்பாக தனது ராஜினாமா கடிதத்தில், மாநில அரசாங்கத்தின் தற்போதைய கொள்கைகள் மற்றும் செயல்பாடுகள்தான், பல ஆண்டுகளாக பணியாற்றிய கட்சியில் இருந்து தான் விலகுவதற்கான காரணம் என கூறியிருந்தார்.

மேலும், பழங்குடியினர், தாழ்த்தப்பட்டோர் மற்றும் பிற்படுத்தப்பட்ட மக்களுக்கான பிரச்னைகளில் தனது போராட்டம் தொடரும் என்றும் தெரிவித்திருந்தார். அதுமட்டுமின்றி, தனது குடும்பம் தான் ஜேஎம்எம் கட்சியில் இருந்து விலகுவேன் என கனவிலும் நினைத்துப் பார்த்ததில்லை என குறிப்பிட்டிருந்தார்.

மேலும், பழங்குடியினரின் பிரச்னைகளில் பாஜக மட்டுமே தீவிரம் காட்டுவதாகவும், மற்றவர்கள் வாக்கு வங்கி அரசியலில் ஈடுபடுவதாகவும் குற்றம்சாட்டியிருந்தார். சமீபத்தில், டெல்லியில் சில தினங்கள் முகாமிட்டிருந்த சம்பாய் சோரன், பாஜக மூத்த தலைவர்களை நேரில் சந்தித்திருந்தார் என்பதும் குறிப்பிடத்தக்கது.

இந்நிலையில்தான், இன்று ராஞ்சியில் பாஜகவில் அதிகாரப்பூர்வமாகவே இணைந்துள்ளார் சம்பாய் சோரன். மத்திய அமைச்சர் சிவராஜ் சிங் சவுகான், அசாம் முதலமைச்சர் ஹிமந்த் பிஸ்வ சர்மா, ஜார்க்கண்ட் மாநில பாஜக தலைவர் பாபுலால் மராண்டி முன்னிலையில் சம்பாய் சோரன் பாஜகவில் இணையும் நிகழ்வு நடந்தது.

சம்பாய் சோரன், ஹேமந்த் சோரன், ஷிபு சோரன்
பாராலிம்பிக்|துப்பாக்கிச் சுடுதலில் இந்தியாவுக்கு 2 பதக்கம்.. மீண்டும் தங்கம் வென்ற அவனி லேகரா!

பட்டியலின மக்களே ஜேஎம்எம் கட்சியின் வாக்கு வங்கி

67 வயதான சம்பாய் சோரன் ஜார்க்கண்டின் மிக முக்கியமான பழங்குடியினத் தலைவராக அறியப்படுகிறார். அப்படிப்பட்ட தலைவர் பாஜகவில் இணைந்தது ஜார்க்கண்ட் முக்தி மோர்ச்சா கட்சியை பதற்றத்திற்கு உள்ளாக்கியுள்ளது என்றே சொல்லலாம். ஏனெனில், அக்கட்சியின் முக்கியமான வாக்கு வங்கியாக இருப்பவர்கள், பட்டியலின சமூக மக்கள்தான். 81 உறுப்பினர்களைக் கொண்ட சட்டசபைக்கு இந்த ஆண்டு இறுதியில் தேர்தல் நடைபெற உள்ளது என்பதும் குறிப்பிடத்தக்கது.

யார் இந்த சம்பாய் சோரன்

சம்பாய் சோரன்
சம்பாய் சோரன்Facebook

ஜார்க்கண்ட் மாநிலத்தின் 23 ஆண்டுகால தனி மாநில வரலாற்றில் நான்காவது முதல்வராக பதவியேற்றவர் சம்பாய் சோரன். 67 வயதான சம்பாய் சோரன் விவசாய குடும்பத்தில் பிறந்தவர். அவரது தந்தை சிமல் ஒரு விவசாயி. அவரது தாய் மாடோ இல்லத்தரசி. கொல்ஹான் பகுதியைச் சேர்ந்த இவர், 10ஆம் வகுப்பு வரை மட்டுமே கல்வி பயின்றவர்.

சம்பாய் சோரன், ஹேமந்த் சோரன், ஷிபு சோரன்
கடத்தியவரிடமிருந்து பிரிய மனமில்லாமல் கதறி அழுத குழந்தை! ராஜஸ்தானில் ருசிகரம்.. நடந்தது என்ன? #Video

ஜேஎம்எம் நிறுவனர் ஷிபு சோரனுக்கு நெருக்கமானவர்

சம்பாய் சோரன் செரைகேலா (Seraikela) தொகுதியில் 1991 ஆம் ஆண்டு சுயேட்சை சட்டமன்ற உறுப்பினராக தேர்வாகி தனது அரசியல் வாழ்வை தொடங்கியவர். ஜார்க்கண்ட் முக்தி மோர்ச்சாவினை ஹேமந்த் சோரனின் தந்தை ஷுபு சோரன் தொடங்குகையில், அதன் ஆரம்ப கால நிறுவன உறுப்பினர்களில் சம்பாய் சோரனும் ஒருவர். ஷிபு சோரனுக்கு மிக நெருக்கமாக இருந்தவர்.

1995 ஆம் ஆண்டு முதல் 2019 ஆம் ஆண்டு வரை நடந்த தேர்தல்களில் 2000-ஆம் ஆண்டில் நடந்த தேர்தலை தவிர அனைத்து தேர்தல்களிலும் வெற்றி பெற்றுள்ளார். இதுவரை ஜார்க்கண்ட் சட்டப்பேரவைக்கு 7 முறை தேர்வு செய்யப்பட்டவர் சம்பாய் சோரன்.

சம்பாய் சோரன், ஹேமந்த் சோரன், ஷிபு சோரன்
வெளிநாடு சென்ற அண்ணாமலை; கட்சி சார்ந்த பணிகளில் முடிவெடுக்க ஹெச்.ராஜா தலைமையில் குழு அமைப்பு!

கலக்கத்தில் ஜேஎம்எம்

2010-ஆம் ஆண்டு அர்ஜுன் முண்டா தலைமையிலான பாஜக கூட்டணி அரசின் அமைச்சரவையிலும் அமைச்சராக செயல்பட்டுள்ளார். ஹேமந்த் சோரன் அமைச்சரவையில் 2013 மற்றும் 2019 ஆம் ஆண்டுகளில் போக்குவரத்துத் துறை, பழங்குடியின மற்றும் பட்டியலின அமைச்சராகவும் பதவி வகித்து வந்தவர் சம்பாய் சோரன்.

ஹேமந்த் சோரன், சம்பாய் சோரன்
ஹேமந்த் சோரன், சம்பாய் சோரன்pt web

கொல்ஹான் புலி என்றும் பாஜகவை அழிக்கும் துருப்புச் சீட்டாகவும் பார்க்கப்பட்ட அவர், பாஜகவிலே ஐக்கியம் ஆனது சில தினங்களாக எதிர்பார்த்த ஒன்றுதான் என்றாலும், ஜார்கண்ட் முக்தி மோர்ச்சா சற்றே கதிகலங்கித்தான் இருக்கிறது.

சம்பாய் சோரன், ஹேமந்த் சோரன், ஷிபு சோரன்
தூத்துக்குடி| "உயிரோடு இருக்கும்போதே எனது தந்தையை கொன்னுட்டாங்களே?" - கதறும் பார்வை மாற்றுத்திறனாளி!

புதிய அமைச்சர்

ஜார்க்கண்ட் முக்தி மோர்ச்சா கட்சியில் இருந்து சம்பாய் சோரன் விலகியதைத் தொடர்ந்து அவருக்கு பதிலாக ராம்தாஸ் சோரன் அமைச்சராக பதவியேற்றுக் கொண்டார்.

ராஜ்பவனில் நடைபெற்ற நிகழ்ச்சியில், ராம்தாஸ் சோரனுக்கு ஆளுநர் சந்தோஷ் குமார் கங்க்வார் பதவிப் பிரமாணம் செய்து வைத்தார். ராம்தாஸ் சோரன், காட்ஷிலா தொகுதியில் இருந்து இருமுறை எம்எல்ஏ-வாக தேர்ந்தெடுக்கப்பட்டவர். இவருக்கு சம்பாய் சோரன் வசமிருந்த நீர்வளம், உயர்கல்வி உள்ளிட்ட துறைகள் வழங்கப்படும் எனக் கூறப்படுகிறது.

சம்பாய் சோரன், ஹேமந்த் சோரன், ஷிபு சோரன்
’அட்டகாசமான அம்சம்’- இனி பணம் அனுப்ப டெபிட் கார்டு தேவையில்லை.. UPI மூலம் ATM-ல் டெபாசிட் செய்யலாம்!

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com