எல்லை பாதுகாப்புப் படையின் அதிகார வரம்பை மத்திய அரசு விரிவுப்படுத்தியதற்கு காங்கிரஸ் உள்ளிட்ட எதிர்க்கட்சிகள் எதிர்ப்பு தெரிவித்துள்ளன.
பஞ்சாப் உள்பட சர்வதேச நாடுகளுடனான எல்லையில் அமைந்திருக்கும் மாநிலங்களில் பாதுகாப்பை பலப்படுத்துவதற்காக எல்லை பாதுகாப்பு படையின் அதிகார வரம்பை மத்திய அரசு விரிவுப்படுத்தியுள்ளது. இந்நிலையில், மத்திய அரசின் இந்த முடிவுக்கு காங்கிரஸ் உள்ளிட்ட எதிர்க்கட்சிகள் எதிர்ப்பு தெரிவித்துள்ளன. தேடுதல், கைது, பறிமுதல் உள்ளிட்ட நடவடிக்கைகளை மேற்கொள்ள எல்லையில் இருந்து 15 கிலோ தூரம் வரையில் எல்லைப் பாதுகாப்புப் படை அதிகாரத்தை பயன்படுத்த அனுமதியளிக்கப்பட்டிருந்தது.
தற்போது இந்த அதிகார வரம்பு 50 கிலோ மீட்டர் தொலைவுக்கு விரிவுப்படுத்தப்பட்டுள்ளது. இதனால், மாநில காவல்துறையின் அதிகாரத்தில் குறுக்கீடுவதாக இருப்பதாக பஞ்சாபில் ஆளும் கட்சியாக உள்ள காங்கிரஸ், ஆம் ஆத்மி உள்ளிட்ட கட்சிகள் எதிர்ப்பு தெரிவித்துள்ளன. இதற்கிடையே, தேசிய நலனுக்காகவே 50 கிலோ மீட்டர் தொலைவுக்கு அதிகாரம் விரிவுப்படுத்தப்பட்டிருப்பதாகவும், அதை காங்கிரஸ் ஏன் எதிர்க்க வேண்டும் எனவும், பாரதிய ஜனதா மூத்த தலைவர் பிரகாஷ் ஜவடேகர் கேள்வி எழுப்பியுள்ளார்.