விவசாயிகளை தீவிரவாதிகள்போல் நடத்துகிறது மத்திய அரசு

விவசாயிகளை தீவிரவாதிகள்போல் நடத்துகிறது மத்திய அரசு
விவசாயிகளை தீவிரவாதிகள்போல் நடத்துகிறது மத்திய அரசு
Published on

துன்பத்தில் இருக்கும் விவசாயிகளுக்கு உதவி செய்யாமல், அவர்களை தீவிரவாதிகள்போல் நடத்துகிறது மத்திய அரசு என்று மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் பொதுச்செயலாளர் சீத்தாராம் யெச்சூரி குற்றம்சாட்டியுள்ளார்.

இதுகுறித்து தனது ட்விட்டர் பக்கத்தில் கருத்து தெரிவித்துள்ள அவர், “விவசாயிகள் துன்பத்தில் இருக்கிறார்கள். போராட்டம் மூலம் தங்களது நிலையை உணர்த்த முயற்சிக்கும் அவர்களை மத்திய அரசு அடக்குகிறது. விவசாயிகளுக்கு தேவையான உதவிகளை செய்யாமல் தீவிரவாதிகளைப் போல் நடத்துகிறது. கடந்த மூன்று ஆண்டுகளில் மட்டும் 1000க்கும் மேற்பட்ட விவசாயிகள் தற்கொலை செய்துகொண்டுள்ளனர். எனவே குறைந்தபட்ச ஆதார விலையுடன், உற்பத்தி செய்யும் வேளாண் பொருட்களை விற்க விவசாயிகளுக்கு உரிமை வழங்க ஆவன செய்ய வேண்டும். அதற்கான சட்டம் இயற்றப்பட வேண்டும்” என்றார்.

இதுகுறித்து பிரதமர் நரேந்திர மோடிக்கு, சீத்தாராம் யெச்சூரி கடிதம் எழுதியுள்ளார். அக்கடிதத்தில் நடைபெற உள்ள நாடாளுமன்ற கூட்டத்தொடரில் அதற்கான சட்டத்தை இயற்ற வேண்டும் என்று குறிப்பிட்டுள்ளார்.

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com