டெல்லியில் புதிய நாடாளுமன்ற கட்டடத்தை கட்டுவதற்கான இறுதிச்சுற்று போட்டியில் 3 நிறுவனங்கள் நுழைந்துள்ளன.
டெல்லியில் புதிய நாடாளுமன்ற கட்டடத்தை கட்ட 7 நிறுவனங்கள் போட்டியிட்ட நிலையில் அவற்றில் 3 நிறுவனங்கள் முதல் கட்டமாக தேர்வு செய்யப்பட்டதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
லார்சன் அண்டு டூப்ரோ, ஷபூர்ஜி பரோன்ஜி, டாட்டா புராஜக்ட்ஸ் ஆகிய நிறுவனங்கள் இறுதிச் சுற்று போட்டியில் இருப்பதாக மத்திய பொதுப்பணித் துறை அதிகாரிகள் தெரிவித்தனர். இந்நிறுவனங்கள் புதிய கட்டடத்திற்கான ஒப்பந்த தொகையை தெரிவிக்க கோரப்பட்டு அத்தொகைகள் அடிப்படையில் யாரிடம் கட்டுமானத்தை ஒப்படைப்பது என்பது முடிவு செய்யப்படும் என அதிகாரிகள் தெரிவித்தனர். புதிய கட்டடம் 889 கோடி ரூபாய் செலவில் கட்டப்பட உள்ள நிலையில் இப்பணிகளை 21 மாதங்களில் பூர்த்தி செய்ய மத்திய பொதுப்பணித் துறை திட்டமிட்டுள்ளது.