ரூ.20 லட்சம் கோடி திட்டங்களுக்கான 5 அம்சங்கள் எவை ? - நிர்மலா சீதாராமன் அறிவிப்பு

ரூ.20 லட்சம் கோடி திட்டங்களுக்கான 5 அம்சங்கள் எவை ? - நிர்மலா சீதாராமன் அறிவிப்பு
ரூ.20 லட்சம் கோடி திட்டங்களுக்கான 5 அம்சங்கள் எவை ? - நிர்மலா சீதாராமன் அறிவிப்பு
Published on
20 லட்சம் கோடிக்கான திட்டங்கள் 5 அம்சங்களின் கீழ் வகுக்கப்படும் என மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் தெரிவித்தார்.

பொருளாதார திட்டங்கள் அறிவிப்பு தொடர்பாகச் செய்தியாளர்களைச் சந்தித்து வரும் நிர்மலா சீதாராமன், “இந்தியா சுயபலத்துடன் செயல்படும் நோக்கத்திலேயே பிரதமர் சுயச்சார்பு திட்டத்தை வலியுறுத்தியுள்ளார். சிறப்புத் திட்டங்கள் மூலம் இந்தியா தன்னிறைவு அடைந்து உலகிற்கு உதவும். தற்சார்பு இந்தியா என்றால் உலகிலிருந்து துண்டித்துக்கொள்வதல்ல. தன்னம்பிக்கையை அதிகரிப்பதே.

 

பிரதான் மந்திரி கிஷான் திட்டத்தின் மூலம் பொது முடக்கத்தின்போது மக்களின் வங்கிக்கணக்கில் நேரடியாகப் பணம் செலுத்தப்பட்டது மிகவும் உதவிக்கரமாக இருந்திருந்துள்ளது. பொருளாதாரம், மனிதவளம், கட்டமைப்பு, தொழில்நுட்பம் மற்றும் தேவை ஆகிய இந்த ஐந்து அம்சங்களின்படியே திட்டங்கள் வகுக்கப்படவுள்ளன. சிறு,குறு நிறுவனங்களுக்கு ரூ.3 லட்சம் கோடி கடன் வழங்கப்படும்” என்று தெரிவித்தார்.

முன்னதாக, நேற்று நாட்டு மக்களுடன் உரையாற்றினார். அப்போது மே 18ஆம் தேதிக்கு முன்பு பொது முடக்கம் நீட்டிப்பு தொடர்பாக அறிவிக்கப்படும் என்றும், அது முற்றிலும் மாறுபட்டு இருக்கும் எனவும் தெரிவித்தார். அத்துடன் நாட்டின் பொருளாதாரத்தை முன்னேற்றும் வகையில் ரூ.20 லட்சம் கோடிக்குத் திட்டங்களை வகுத்துள்ளதாகத் தெரிவித்தார்.

 

இந்நிலையில் நிர்மலா சீதாராமன் இன்று மாலை 4 மணிக்குச் செய்தியாளர்களைச் சந்தித்துப் பேசி வரும் நிர்மலா சீதாராமன், “தொலைநோக்கு திட்டத்தைப் பிரதமர் மோடி அறிவித்திருக்கிறார். சுயச்சார்பு பாரதம் என்ற பெயரில் திட்டங்கள் செயல்படுத்தப்படும்” என்றார்.

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com