ஊடகவியலாளர்கள் கொரோனாவால் பாதிக்கப்படுவது வருத்தமளிப்பதாக மத்திய சுகாதாரத்துறை அமைச்சம் தெரிவித்துள்ளது.
இந்தியாவில் கடந்த 24 மணி நேரத்தில் 1,553 பேருக்கு கொரோனா பாதிப்பு 36 பேர் உயிரிழப்பு. கொரோனா பாதிப்பில் இருந்து குணமடைந்து வருவோரின் விகிதம் 14.75 ஆக உள்ளது. இதனிடையே, நேற்று தமிழகத்தில் 2 பத்திரிகையாளர்கள் கொரோனா பாதிப்பு இருந்தது கண்டறியப்பட்டது. இதனையடுத்து இருவரும் அரசு மருத்துவமனைகளில் சேர்க்கப்பட்டுள்ளனர்.
பத்திரிகையாளர்களுக்கும் அரசு சோதனை நடத்தவேண்டு ம் என்று வேண்டுகோள் விடுக்கப்பட்டது. அதைஏற்று, செய்தி சேகரிக்கும் பணியில் ஈடுபட்டுவரும் பத்திரிகையாளர்களுக்கு கொரோனா பரிசோதனை செய்யப்படும் என சென்னை மாநகராட்சி அறிவித்துள்ளது.
இந்நிலையில், ஊடகவியலாளர்கள் கொரோனாவால் பாதிக்கப்படுவது வருத்தமளிப்பதாக மத்திய சுகாதாரத்துறை அமைச்சம் தெரிவித்துள்ளது. ஊடகவியலாளர்கள் யாருக்கெல்லாம் பரிசோதனை தேவையோ அவர்களுக்கு உடனடியாக பரிசோதனை செய்யப்படும் எனவும் சரியான வழிகாட்டுதல்களை பத்திரிகையாளர்கள் முறையாக பின்பற்ற வேண்டும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. ஊரடங்கை மீறுவோர் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்பட்டு வருவதாகவும் மத்திய சுகாதாரத்துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது.