ஒரே நாடு ஒரே தேர்தல், ஒரே நாடு ஒரே ரேஷன் என்ற அடிப்படையில் ஒரே நாடு ஒரே மாணவர் அடையாள எண் என்ற திட்டத்தையும் மத்திய பாஜக அரசு அறிமுகம் செய்ய உள்ளது. ஆதார் எண் போன்று 12 இலக்கம் கொண்ட அபார் (APAAR) எண் என மாணவர்களுக்கு வழங்க மத்திய கல்வி அமைச்சகம் திட்டமிட்டுள்ளது.
பள்ளியில் சேரும் குழந்தைக்கு வழங்கப்படும் எண், அவர்கள் உயர் கல்வி பெறும் வரை பயன்படும் வகையில் திட்டம் வகுக்கப்பட்டுள்ளது. இதன் மூலம் போலி சான்றிதழ்கள், போலி மதிப்பெண்கள் உருவாக்கப்படுவதை தவிர்க்க முடியும் என கூறப்படுகிறது. அதேபோல் பள்ளிகள், கல்லூரிகள் மாறும் போது எளிமையாக தரவுகளை கல்வி நிறுவனங்கள் பெற்றுக் கொள்ள முடியும்.
மேலும், அலுவலகங்களில் பணிக்கு சேரும் போதும் இந்த எண்ணை கொண்டு பயனரின் கல்வி விவரங்களை அறிந்துக் கொள்ள முடியும் என்பது குறிப்பிடத்தக்கது. இந்த திட்டம் குறித்து நாளை முதல் வரும் 18 ஆம் தேதி வரை பெற்றோர் - ஆசிரியர் கூட்டம் அமைத்து கருத்துகள் கேட்க அனைத்து கல்வி நிறுவனங்களுக்கும் சுற்றறிக்கை அனுப்பப்பட்டுள்ளது.