பதவியேற்ற மூன்று ஆண்டுகளில் சாதித்தது என்ன என்பது பற்றி அறிக்கை அளிக்குமாறு மத்திய அமைச்சர்களிடம் மோடி அரசு அறிக்கைக் கேட்டுள்ளது.
நரேந்திர மோடி தலைமையிலான பா.ஜனதா கூட்டணி அரசு ஆட்சி, அமைத்து அடுத்த மாதத்தோடு மூன்று வருடமாகிறது. இது தொடர்பாக மத்திய தகவல், ஒலிபரப்புத்துறை அமைச்சர் வெங்கையா நாயுடு அனைத்து மத்திய அமைச்சர்களுக்கும் ஒரு கடிதம் எழுதி உள்ளார். இதில் அமைச்சர்கள், பாயின்ட், பாயின்டாக மூன்றாண்டுகளில் தாங்கள் செய்த சாதனைகளை மூன்று பக்க அளவில் விளக்குமாறு கேட்டுக்கொண்டுள்ளார்.
அந்த அறிக்கை, ‘மக்களால் பாராட்டப்பட்ட உங்கள் அமைச்சகத்தின் 5 சாதனைகள், அமைச்சகத்தின் முக்கிய செயல்திறன் காட்டிகள், 2014–ம் ஆண்டு அமைச்சகம் எப்படி இருந்தது, இப்போது எப்படி இருக்கிறது என்பது பற்றிய ஒப்பீடு. செயல்முறை, கொள்கை, திட்டங்களில் உங்கள் அமைச்சகம் கொண்டு வந்த சீர்திருத்தங்கள், செயல்படுத்தி வெற்றி கண்ட கதை ஆகிய 5 அம்சங்களின் அடிப்படையில் இருக்க வேண்டும் என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
இதன் அடிப்படையில் புத்தகம் தயாரித்து அதை மே மாதம் 26–ம் தேதிக்கு முன் வெளியிட மத்திய அரசு முடிவு செய்துள்ளதாகத் தெரிகிறது.