இந்தியாவில் சட்டப்பூர்வமாக்கப்படுகிறதா ஆன்லைன் பந்தயம், சூதாட்டம்? மத்திய அரசு பதில்!

இந்தியாவில் சட்டப்பூர்வமாக்கப்படுகிறதா ஆன்லைன் பந்தயம், சூதாட்டம்? மத்திய அரசு பதில்!
இந்தியாவில் சட்டப்பூர்வமாக்கப்படுகிறதா ஆன்லைன் பந்தயம், சூதாட்டம்? மத்திய அரசு பதில்!
Published on

ஆன்லைன் பந்தயம் மற்றும் சூதாட்டத்தில் பயன்படுத்தப்பட்ட பணத்தின் அளவு குறித்து அரசிடம் ஏதேனும் கணக்கெடுப்பு உள்ளதா என்றும், ஆன்லைன் பந்தயம் மற்றும் சூதாட்ட பயன்பாடுகளை சட்டப்பூர்வமாக்குவதற்கு அரசாங்கத்திற்கு ஏதேனும் திட்டம் உள்ளதா என்றும் நாடாளுமன்ற உறுப்பினரின் கேள்விக்கு மத்திய அரசு நிதி அமைச்சகம் எழுத்துப்பூர்வமான பதில் அளித்துள்ளது.

அதில், “இது தொடர்பாக, அரசு எந்த ஒரு கணக்கெடுப்பும் நடத்தவில்லை. ஆன்லைன் பந்தயம் மற்றும் சூதாட்ட பயன்பாடுகளை சட்டப்பூர்வமாக்குவதற்கு திட்டம் எதுவும் இல்லை. அதற்கான பரிந்துரையும் வரவில்லை. சைபர் குற்றங்கள் மற்றும் கிரிப்டோ சொத்துக்கள் தொடர்பான மோசடிகள் குறித்து அமலாக்க இயக்குநரகம் விசாரித்து வருவதுடன், இதுபோன்ற குற்றங்களை கண்காணித்து வருகிறது. மேலும் மத்திய அமலாக்கத் துறை இயக்குநரகம் ஆன்லைன் சூதாட்டம் மூலமாக சட்டவிரோத பண பரிவர்த்தனை மற்றும் ஹவாலா பணப்பரிவர்த்தனை நடைபெற்று இருப்பதை கண்டறிந்து வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது” என மத்திய அரசு தெரிவித்துள்ளது.

அதேவேளையில் இந்த விவகாரத்தில் 16.12.2022 நிலவரப்படி, பணமோசடி தடுப்புச் சட்டத்தின் கீழ் ரூ. 212.91 கோடிகள் முடக்கப்பட்டுள்ளது என்றும் மத்திய அரசு கூறியுள்ளது.

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com