தகவல் திருட்டு விவகாரம் குறித்து ஃபேஸ்புக் நிறுவனம் அளித்த பதிலை பொது வெளியில் பகிர முடியாது என மத்திய அரசு தெரிவித்துவிட்டது.
ஃபேஸ்புக் நிறுவனம் அமெரிக்க அதிபர் தேர்தலின், வாக்களர்களின் தகவல்களை தனியார் நிறுவனத்திற்கு பகிர்ந்ததாக குற்றச்சாட்டுகள் எழுப்பப்பட்டது. இதேபோன்று மற்ற நாடுகளின் தேர்தல்களின் போது ஃபேஸ்புக் நிறுவனம் தகவல்கள் பகிர்ந்திருக்காலம் என்றும் கூறப்பட்டது. இதுதொடர்பாக விளக்கமளிக்குமாறு இந்திய அரசு ஃபேஸ்புக் நிறுவனத்தினிடம் வலியுறுத்தியிருந்தது. அரசு விளக்கம் கேட்ட நிலையில், விரிவான பதிலை ஃபேஸ்புக் சமர்ப்பித்திருந்தது.
இதற்கிடையே ஃபேஸ்புக் தகவல் திருட்டால் இந்தியாவில் 5 லட்சத்து 62 ஆயிரம் பேர் பாதிக்கப்பட்டிருக்க வாய்ப்புள்ளதாக பிடிஐ செய்தி நிறுவனம் சில மாதங்களுக்கு முன் தெரிவித்திருந்தது. அத்துடன் ஃபேஸ்புக் நிறுவனம் மத்திய அரசிடம் அளித்த விளக்கம் தொடர்பான தகவல்களை நிறுவனம் தகவல் அறியும் சட்டம் மூலம் கேட்டிருந்தது. இந்நிலையில் ஃபேஸ்புக் அளித்த பதிலை தெரிவிக்க மத்திய அரசு தற்போது மறுத்துள்ளது.