பல்வேறு பொருட்களுக்கான ஜிஎஸ்டி வரியை உயர்த்தும் முடிவை மத்திய அரசு தள்ளிவைத்து உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. பல்வேறு பொருட்களுக்கான வரியை சீரமைக்க ஜிஎஸ்டி கவுன்சிலுக்கு பரிந்துரை அளிக்கப்பட்டிருந்தது. இதன்படி பல பொருட்கள் குறைந்த வரி பிரிவிலிருந்து அதிக வரி பிரிவிற்கு மாற்றப்படும் எனத் தகவல் வெளியாகியிருந்தது.
ஆனால் தற்போது அத்தியாவசிய பொருட்கள் விலை ஏற்கெனவே கடுமையாக அதிகரித்து பணவீக்கம் அதிகரித்துள்ள நிலையில் ஜிஎஸ்டி வரியையும் அதிகரிப்பது சரியாக இருக்காது என அரசு கருதுகிறது. ஜிஎஸ்டி கவுன்சிலில் உள்ள மாநில நிதியமைச்சர்களும் இக்கருத்தையே கொண்டுள்ளனர். எனவே பணவீக்கம் கட்டுக்குள் வந்த பிறகு ஜிஎஸ்டி வரி உயர்வை அமல்படுத்த அரசு திட்டமிட்டுள்ளதாக தெரிகிறது.