மத்திய அரசின்கீழ் செயல்படும் பள்ளிகளில் பயிலும் குழந்தைகளுக்கு கதர் ஆடையை சீருடையாக வழங்க மத்திய அரசு திட்டமிட்டிருப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
நாடு முழுவதும் மனிதவள மேம்பாட்டுத்துறை அமைச்சகத்தின் கீழ் செயல்படும் கேந்திரிய வித்யாலயா உள்ளிட்ட பள்ளிகளில் 15 லட்சத்துக்கும் அதிகமான மாணவ, மாணவியர் படித்து வருன்றனர். இவர்களுக்கு தற்போது பாலிஸ்டர் உள்ளிட்ட பல வகையான துணிகளால் சீருடைகள் வழங்கப்படுகின்றன. இதற்குப் பதிலாக ஒட்டுமொத்தமாக கதர் ஆடையில் தைக்கப்பட்ட சீருடைகளை வழங்க மத்திய அரசு திட்டமிட்டுள்ளது.
காதி தொழிலை மீட்டெடுக்கவும், மகாத்மா காந்தியின் 150வது பிறந்த நாளை கொண்டாடும்வகையிலும் இத்தகைய மாற்றத்தை கொண்டு வர இருப்பதாக சொல்லப்படுகிறது. இதுதொடர்பான ஆலோசனைகள் நடந்து வருவதாகவும், விரைவில் உறுதி செய்யப்படும் என கேந்திரிய வித்யாலயா அமைப்பின் ஆணையர் சந்தோஷ் குமார் கூறியுள்ளார்.