100 விழுக்காடு பணியாளர்களுடன் இன்று முதல் மத்திய அரசு அலுவலகங்கள் இயங்கும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
கொரோனா 3ஆவது அலை காரணமாக பல்வேறு கட்டுப்பாடுகளை விதித்த அரசு, 50 விழுக்காடு பணியாளர்களுடன் மத்திய அரசின் அலுவலகங்கள் இயங்க அனுமதித்தது. இந்நிலையில் நாடு முழுவதும் தொற்றுப்பரவல் குறைந்திருப்பதால் இன்று முதல் மத்திய அரசு அலுவலகங்கள் முழுமையான பணியாளர்களுடன் இயங்கும் என அமைச்சர் ஜிதேந்தர் சிங் தெரிவித்துள்ளார்.
இந்த உத்தரவு அனைத்துமட்டங்களிலுள்ள பணியாளர்களுக்கும் பொருந்தும் என தெளிவுபடுத்தியுள்ள அமைச்சர், முகக் கவசம், தனிமனித இடைவெளி உள்ளிட்ட கொரோனா தடுப்பு விதிமுறைகளை மத்திய அரசு ஊழியர்கள் கட்டாயம் பின்பற்ற வேண்டும் என அறிவுறுத்தியுள்ளார். முன்னதாக, பிப்ரவரி 15ஆம் தேதி வரை மத்திய அரசு அலுவலகங்களைச் சேர்ந்த 50 விழுக்காடு ஊழியர்கள் வீட்டிலிருந்தே பணியாற்றலாம் என மத்திய அரசு அனுமதி அளித்திருந்தது.