ஜிஎஸ்டி வரிக்குறைப்பின் பலனை மக்களுக்கு அளிக்காததாக கூறி பிரபல டாமினோஸ் பீஸா நிறுவனத்துக்கு மத்திய அரசு நோட்டீஸ் அனுப்பியுள்ளது.
ஜிஎஸ்டி அமைப்பின் ஒரு அங்கமான அதீத லாப தடுப்பு பிரிவு இந்த நோட்டீசை அனுப்பியுள்ளது. ஆனால் இந்தக் குற்றச்சாட்டை டாமினோஸ் பீசா நிறுவனத்தை இயக்கி வரும் ஜூபிலன்ட் ஃபுட்ஒர்க்ஸ் நிறுவனம் மறுத்துள்ளது. வரிக்குறைப்பின் பலனை மக்களுக்கு அளித்து வருவதாக அந்நிறுவனம் கூறியுள்ளது.
இதுகுறித்து முறையீடு செய்யப்போவதாகவும் அந்நிறுவனம் கூறியுள்ளது. கடந்தாண்டு நவம்பர் மாதம் உணவகங்களுக்கான ஜிஎஸ்டி வரி குறைக்கப்பட்டிருந்தது. ஜிஎஸ்டி வரிக்குறைப்பின் பலனை மக்களுக்கு தரவில்லை எனக் கூறி 15 நிறுவனங்களுக்கு இதுவரை நோட்டீஸ் அனுப்பப்பட்டுள்ளது.