விவசாய விளை நிலங்களில் ரசாயன உர பயன்பாட்டை குறைப்பதற்காக சத்துக்கள் சேர்க்கப்பட்ட கங்கை ஆற்றுப்படுகை மண்ணை விவசாயிகளுக்கு வழங்க மத்திய அரசு திட்டமிட்டுள்ளது
கங்கை நதி தூய்மை இயக்கத்தின் இயக்குநர் அசோக் குமார் இது குறித்து டெல்லியில் பேசினார். அப்போது, கங்கை நதியை தூய்மைப்படுத்துகையில் ஏராமான சேறு, சகதிகள் கிடைப்பதாகவும் இவற்றுடன் பாஸ்பரஸ் போன்ற பயிர் வளர்ச்சிக்கு தேவைப்படும் ஊட்டச்சத்துக்களை சேர்த்து உரமாக பயன்படுத்த முடியும் எனத் தெரிவித்தார்.
கங்கை நதி மண்ணைக்கொண்டு உரங்களை தயாரிக்கும் பணி நடந்து வருவதாகவும் இவை விவசாயிகளுக்கு மானிய விலையில் விற்கப்படும் என்றும் அவர் தெரிவித்தார். மேலும் ரசாயன உரங்களை தவிர்த்து கங்கை மண்ணை பயன்படுத்துவது இயற்கை விவசாயத்தை ஊக்குவிப்பதாகவும் அமையும் என அசோக் குமார் தெரிவித்தார்.
கங்கை நதியை சுத்தப்படுத்த 20 ஆயிரம் கோடி ரூபாய் செலவில் நமாமி கங்கே என்ற பெயரில் சிறப்புத் திட்டத்தை மத்திய அரசு கடந்த 7 ஆண்டுகளாக செயல்படுத்தி வருவது குறிப்பிடத்தக்கது