பாப்புலர் ஃப்ரன்ட் ஆஃப் இந்தியாவின் இணையதளம் முடக்கம்

பாப்புலர் ஃப்ரன்ட் ஆஃப் இந்தியாவின் இணையதளம் முடக்கம்
பாப்புலர் ஃப்ரன்ட் ஆஃப் இந்தியாவின் இணையதளம் முடக்கம்
Published on

பாப்புலர் ஃப்ரன்ட் ஆஃப் இந்தியாவின் அதிகாரபூர்வ இணையதளத்தை முடக்கியுள்ளது மத்திய அரசு.

பாப்புலர் ஃப்ரன்ட் ஆஃப் இந்தியா அமைப்புக்கு 5 ஆண்டுகள் தடை விதித்து மத்திய உள்துறை அமைச்சகம் உத்தரவு பிறப்பித்துள்ளது. சட்டவிரோத செயல்பாடுகள் காரணமாக இந்தத் தடை விதிக்கப்பட்டுள்ளது என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த தடை உடனடியாக அமலுக்கு வருகிறது என்றும், பாப்புலர் ஃப்ரன்ட் ஆஃப் இந்தியா அமைப்பு மட்டுமின்றி, அதன் துணை அமைப்புகள் மற்றும் அதற்கு உதவும் அமைப்புகளுக்கும் மத்திய அரசு தடை விதித்துள்ளது.

இதன் தொடர்ச்சியாக பாப்புலர் ஃப்ரன்ட் ஆஃப் இந்தியாவின் அதிகாரப்பூர்வ இணையதளமான www.popularfrontindia.org என்ற இணையதளத்தை மத்திய அரசு முடக்கியுள்ளது. மேலும் பாப்புலர் ஃப்ரன்ட் ஆஃப் இந்தியாவின் ட்விட்டர், யூடியூப், இன்ஸ்டாகிராம் உள்ளிட்ட சமூக வலைதள கணக்குகளையும் முடக்க மத்திய அரசு உத்தரவிட்டுள்ளது.

இதையும் படிக்க: `சட்ட விரோத நடவடிக்கைகளில் ஈடுபாடு’- பி.எஃப்.ஐ அமைப்புக்கு 5 ஆண்டுகள் தடை விதித்தது அரசு!

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com