கொரோனா பரவல் மீண்டும் அதிகரித்து வரும் நிலையில் மத்திய அரசு அலுவலகங்கள் துணைச் செயலாளர் பதவிக்கு கீழுள்ள பணியாளர்களில் 50 சதவிகிதம் பேருடன் செயல்படும் என மத்திய அரசு அறிவித்துள்ளது.
எஞ்சிய 50 சதவிகிதம் பேர் வீடுகளிலிருந்தே பணிபுரிவார்கள் என அறிவிக்கப்பட்டுள்ளது. மாற்றுத்திறனாளிகள் மற்றும் கர்ப்பிணிகள் அலுவலகத்திற்கு வருவதிலிருந்து விலக்கு அளிக்கப்பட்ட்டுள்ளது. அலுவலகத்தில் அதிக கூட்டத்தை தவிர்க்க மத்திய அரசு ஊழியர்கள் வெவ்வேறு நேரத்திற்கு அலுவலகத்திற்கு வரும் வகையிலான நடைமுறையை பின்பற்றவேண்டும் எனவும் உத்தரவிடப்பட்டுள்ளது.
கொரோனா கட்டுப்பாட்டு பகுதிகளில் வசிக்கும் அனைத்து ஊழியர்களும் அலுவலகத்திற்கு வருவதிலிருந்து விலக்கு அளிக்கப்பட்டுள்ளது. துணைச் செயலாளர் மற்றும் அதற்கு மேலுள்ள பதவிகளில் உள்ளவர்கள் அனைத்து நாள்களிலும் அலுவலகத்திற்கு வரவேண்டும் என்றும் உத்தரவிடப்பட்டுள்ளது.