இந்திய ஆயுதத் தயாரிப்பாளர்களால் விற்கப்படும் வெடிமருந்துகள், ஐரோப்பிய வாடிக்கையாளர்களால் உக்ரைனுக்கு திருப்பி விடப்படுவதாக ராய்ட்டர்ஸ் நிறுவனம் செய்தி வெளியிட்டிருந்தது. அதில், உக்ரைனின் பாதுகாப்பை உறுதிப்படுத்தும் வகையில் இந்த பரிமாற்றம் ஓராண்டுக்கு மேல் நிகழ்ந்துள்ளது என்றும் கூறப்பட்டது.
இந்நிலையில், இத்தகவலை மத்திய அரசு திட்டவட்டமாக மறுத்துள்ளது. இதுதொடர்பாக விளக்கம் அளித்துள்ள மத்திய வெளியுறவுத்துறை செய்தித் தொடர்பாளர் ரந்தீர் ஜெய்ஸ்வால், இந்த தகவல் யூகங்கள் அடிப்படையிலானது என குறிப்பிட்டுள்ளார்.
ராணுவம் சார்ந்த பொருட்களை ஏற்றுமதி செய்யும் போது சர்வதேச கடமைகளை பின்பற்றுவதை இந்தியா எப்போதும் உறுதி செய்து கொண்டிருப்பதாகவும் கூறினார்.