அனைத்து ரக வெங்காயம் ஏற்றுமதிக்கும் மத்திய அரசு அதிரடியாக தடை விதித்துள்ளது.
வெங்காயம் விலை அக்டோபர் முதல் பிப்ரவரி மாதம் வரை ஆண்டுதோறும் கிடுகிடுவென உயர்வது வழக்கம். இப்போது வெங்காயம் ஒரு கிலோ நாடு முழுவதும் சுமார் 45 ரூபாய் முதல் 60 ரூபாய் வரை விற்பனையாகிறது.
வரும் பண்டிகைக் காலத்தில் வெங்காயத்தின் தேவை உயரக்கூடிய நிலையில், வரத்து குறைவால் தட்டுப்பாடு ஏற்படும் அபாயமுள்ளது. அதைத் தடுக்கும் வகையில் அனைத்து ரக வெங்காயம் ஏற்றுமதிக்கும் தடை விதித்து மத்திய அரசு உத்தரவிட்டுள்ளது. இந்த தடை உடனடியாக அமலுக்கு வருவதாகவும் அறிவிக்கப்பட்டுள்ளது. இதன்மூலம், உள்நாட்டு சந்தைகளில் வெங்காயம் வரத்து அதிகரித்து விலை உயராமல் இருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.