தென்னிந்தியாவிலேயே முதல் முறை.. ஓசூர் மக்களுக்காக நற்செய்தி சொன்ன மெட்ரோ ரயில் நிர்வாகம்!

தென்னிந்தியாவிலேயே முதல் முறை.. ஓசூர் மக்களுக்காக நற்செய்தி சொன்ன மெட்ரோ ரயில் நிர்வாகம்!
தென்னிந்தியாவிலேயே முதல் முறை.. ஓசூர் மக்களுக்காக நற்செய்தி சொன்ன மெட்ரோ ரயில் நிர்வாகம்!
Published on

பெங்களூரு - ஓசூர் இடையே மெட்ரோ ரயில் திட்டத்திற்கு மத்திய அரசு ஒப்புதல் அளித்துள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளது. தென்னிந்தியாவிலேயே முதல் முறையாக இரு மாநிலங்களுக்கு இடையே மெட்ரோ ரயில் பாதை அமைய உள்ள வழித்தடமாக ஓசூர் பெங்களூரு மெட்ரோ ரயில் இருக்கும் என தெரிவிக்கப்பட்டிருக்கிறது.

கர்நாடகாவின் தலைநகர் பெங்களூருவுக்கும் தமிழ்நாட்டின் ஒசூர் ஆகிய நகரங்கள் அருகருகே அமைந்திருப்பதால், நாள்தோறும் லட்சக்கணக்கான மக்கள் இரு நகரங்களுக்கும் பயணிக்கின்றனர். தொழில் நகரமான ஓசூரில் இருந்து பெங்களூருவை இணைக்கும் மெட்ரோ ரயில் திட்டத்தை அமைப்பதற்கான முன் முயற்சியை தமிழ்நாடு அரசு மூன்று மாதத்திற்கு முன்பு எடுத்தது.

அதன்படி, பெங்களூருவிலிருந்து ஒசூர் நகரத்தை இணைக்கும் வகையிலான மெட்ரோ ரயில் திட்டத்தை அமைப்பதற்கான சாத்தியக்கூறு அறிக்கைகளை சென்னை மெட்ரோ ரயில் நிர்வாகம் தயாரித்து வந்தது. இந்த நிலையில்தான் பொம்மசந்திரா மற்றும் ஓசூர் இணைக்கும் வகையில் மெட்ரோ ரயில் திட்டம் செயல்படுத்தப்பட உள்ளது.

இதனிடையே, பெங்களூரு ஓசூர் மெட்ரோ அமைப்பதற்கான சாத்தியக்கூறு அறிக்கைகள் தயாரிப்பதற்காக ஏற்கெனவே சென்னை மெட்ரோ ரயில் நிர்வாகம் 75 லட்ச ரூபாய் நிதி ஒதுக்கியுள்ளது. 20.5 கிலோ மீட்டர் நீளமுள்ள திட்டத்தில் தமிழ்நாட்டில் 8.8 கிலோமீட்டரும், கர்நாடகாவில் 11.7 கிலோமீட்டர் அமைய உள்ளது.

இந்நிலையில் சென்னை மெட்ரோ ரயில் நிர்வாகம் சமர்ப்பித்த சாத்தியக்கூறு அறிக்கையை மத்திய நகர்ப்புற மேம்பாட்டு துறை அமைச்சகம் அனுமதி வழங்கியுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. ஓசூர் நகரத்தை பெங்களூருவோடு இணைக்கும் மெட்ரோ திட்டத்திற்கு கர்நாடக அரசும் ஒப்புதல் அளித்துள்ளதாக தகவல்கள் வெளியாகி இருக்கிறது.

அடுத்த கட்டமாக விரிவான சாத்தியக்கூறு மற்றும் திட்ட அறிக்கைகள் தயாரிக்கும் பணி தொடங்கும் என்றும் விரைவில் கட்டுமான பணிகளை தொடங்குவதற்கான முயற்சியில் இரு மாநில அரசுகளும் இறங்கும் என்றும் அதிகாரிகள் தரப்பில் தெரிவிக்கப்பட்டிருக்கிறது.

தென்னிந்தியாவிலேயே முதல் முறையாக இரு மாநிலங்களுக்கு இடையே மெட்ரோ ரயில் பாதை அமைய உள்ள வழித்தடமாக ஓசூர் பெங்களூரு மெட்ரோ ரயில் திட்டம் இருக்கும் என்றும் கூறப்பட்டுள்ளது.

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com