மத்திய பட்ஜெட் | பெண்கள் பலனடையும் வகையில் உள்ள அறிவிப்புகள் என்னென்ன?

பெண்கள் பலனடையும் வகையில் மத்திய பட்ஜெட்டில், மூன்று லட்சம் கோடி ரூபாய் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.
பெண்களுக்காக பட்ஜெட்டில் உள்ள சிறப்பம்சங்கள்
பெண்களுக்காக பட்ஜெட்டில் உள்ள சிறப்பம்சங்கள்PT Web
Published on

2024ம் ஆண்டிற்கான மத்திய பட்ஜெட்டை நேற்று தாக்கல் செய்து உரையாற்றிய நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன், “பொருளாதார வளர்ச்சியில் பெண்களின் பங்கை அதிகரிக்க வேண்டும் என்பது அரசின் நோக்கம். பணியிடத்தில் பெண்களின் பங்களிப்பு குறிப்பிடத்தகுந்த அளவு உயர்ந்துள்ளது. தொடர்ந்து பெண்களை மையப்படுத்தும் வகையிலான திட்டங்களுக்கு பட்ஜெட்டில் 3 லட்சம் கோடி ரூபாய்க்கும் அதிக நிதி ஒதுக்கப்பட்டுள்ளது” என்றார்.

அந்தவகையில்,

  • “பணிபுரியும் பெண்களுக்கு தொழில் நிறுவனங்களுடன் இணைந்து மகளிர் தங்கும் விடுதிகள் அமைக்கப்படும்

  • பணிபுரியும் இளம் தாய்மார்களுக்காக பணியிடத்தில் குழந்தைகள் பராமரிப்பகம் அமைக்கப்படும்

  • பெண்களின் திறன் மேம்பாட்டு திட்டங்கள் கொண்டு வரப்படும்”

என்றார்.

பெண்களுக்காக பட்ஜெட்டில் உள்ள சிறப்பம்சங்கள்
இன்றைய காலை தலைப்புச் செய்திகள் | மத்திய பட்ஜெட் முதல் நீட் வழக்கில் உச்சநீதிமன்றம் தீர்ப்பு வரை!

பெண்கள் மற்றும் குழந்தைகள் மேம்பாட்டுக்காக பட்ஜெட்டில் 2.5 சதவிகிதம் கூடுதலாக ஒதுக்கப்பட்டுள்ளது. இத்துறைக்கு கடந்த ஆண்டு 25,448 கோடி ருபாய் ஒதுக்கப்பட்ட நிலையில், இந்த முறை 26,092 கோடி ரூபாய் ஒதுக்கப்பட்டுள்ளது.

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com