2024-25ஆம் ஆண்டுக்கான முழுபட்ஜெட் தாக்கல் செய்தபோது, முத்ரா கடன்களின் வரம்பு தற்போதுள்ள 10 லட்சம் ரூபாயிலிருந்து 20 லட்சம் ரூபாயாக உயர்த்தப்படும் என அறிவிக்கப்பட்டது. முத்ரா கடனை ஏற்கனவே பெற்றவர்கள் அதனை முறையாக திருப்பி செலுத்திவிட்டு, தருண் பிளஸ் பிரிவில் இக்கடனை பெற்றுக்கொள்ள அறிவுறுத்தப்பட்டுள்ளது.
புதிதாக தொழில் தொடங்க விரும்புபவர்கள் இந்த கடனை பெற்றுக்கொள்ளலாம் எனவும் கூறப்பட்டுள்ளது. முத்ரா கடன்கள் 4 பிரிவுகளில் வழங்கப்படுகிறது. ஷிஷு திட்டத்தின் கீழ் 50 ஆயிரம் ரூபாய் வரையிலும், கிஷோர் திட்டத்தில் 50 ஆயிரம் ரூபாய் முதல் 5 லட்சம் ரூபாய் வரையிலும், தருண் திட்டத்தில் 5 லட்சம் ரூபாய் முதல் 10 லட்சம் ரூபாய் வரையிலும் கடன் வழங்கப்பட்டு வருகிறது. புதிதாக அறிவிக்கப்பட்ட தருண் பிளஸ் திட்டத்தில் 10 லட்சம் ரூபாய் முதல் 20 லட்சம் ரூபாய் வரை தொழில்நிறுவனங்களுக்கு கடன் வழங்கப்படுகிறது.