ரூ.678.93 கோடி வங்கி மோசடி புகார்: குஜராத் எண்ணெய் நிறுவனம் மீது சிபிஐ வழக்குப்பதிவு

ரூ.678.93 கோடி வங்கி மோசடி புகார்: குஜராத் எண்ணெய் நிறுவனம் மீது சிபிஐ வழக்குப்பதிவு
ரூ.678.93 கோடி வங்கி மோசடி புகார்: குஜராத் எண்ணெய் நிறுவனம் மீது சிபிஐ வழக்குப்பதிவு
Published on

பாங்க் ஆப் இந்தியாவில் ரூ.678.93 கோடி மோசடி செய்த விவகாரத்தில் குஜராத்தை தளமாகக் கொண்ட எண்ணெய் நிறுவனம் மீது சிபிஐ வழக்குப்பதிவு செய்துள்ளது. 

குஜராத்தை தளமாகக் கொண்ட விமல் எண்ணெய் நிறுவனம், அந்த மாநிலத்தில் பல்வேறு இடங்களில் இயங்கி வருகிறது. இந்த நிலையில் இந்நிறுவனம் தங்களது வங்கியில் ரூ.678.93 கோடி அளவுக்கு மோசடி செய்துள்ளதாக பாங்க் ஆப் இந்தியா அளித்த புகாரின் பேரில் சிபிஐ அதிகாரிகள் விமல் எண்ணெய் நிறுவனம் இயங்கும் 6 இடங்களில் அதிரடியாக சோதனை செய்தனர். 

இந்த சோதனைக்குப் பின்னர் விமல் எண்ணெய் நிறுவனம் மற்றும் அந்நிறுவனத்தின் இயக்குனர்களான ஜெயேஷ்பாய் சாண்டுபாய் படேல், முகேஷ்குமார் நாரன்பாய் படேல், டிடின் நாராயன்பாய் படேல் மற்றும் மோனா ஜிக்னேஷ்பாய் ஆச்சார்யா ஆகியோர் மீது சிபிஐ அதிகாரிகள் வழக்குப்பதிவு செய்தனர். 

குற்றம் சாட்டப்பட்டவர்கள் 2014-2017 காலகட்டத்தில் மாலாஃபைட் நடவடிக்கைகள் மூலம் கூட்டமைப்பு வங்கிகளை ஏமாற்றியுள்ளதாக சிபிஐ செய்தித் தொடர்பாளர் ஆர்.சி.ஜோஷி தெரிவித்துள்ளார். மேலும், வங்கி நிதிகளை திசை திருப்புதல், தொடர்புடைய நபர்களுடன் மோசடி பரிவர்த்தனைகள் போன்ற பல வழிகளில் பாங்க் ஆப் இந்தியாவை விமல் எண்ணெய் நிறுவனம் ஏமாற்றியதாக குற்றம் சாட்டப்பட்டுள்ளது. 

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com