ராஜஸ்தான் முதல்வரின் சகோதரருக்கு சொந்தமான இடங்களில் சிபிஐ சோதனை- காங். கட்சியினர் கண்டனம்

ராஜஸ்தான் முதல்வரின் சகோதரருக்கு சொந்தமான இடங்களில் சிபிஐ சோதனை- காங். கட்சியினர் கண்டனம்
ராஜஸ்தான் முதல்வரின் சகோதரருக்கு சொந்தமான இடங்களில் சிபிஐ சோதனை- காங். கட்சியினர் கண்டனம்
Published on

ராஜஸ்தான் முதல்வர் அசோக் கெலாட்டின் சகோதரர் வீடு மற்றும் அவருக்கு சொந்தமான இடங்களில் சிபிஐ இன்று சோதனை நடத்தியுள்ளது.

ராஜஸ்தானில் விவசாயிகளுக்கான உரம் வழங்குவதில் முறைகேட்டில் ஈடுபட்டதாக கடந்த 2007ஆம் ஆண்டு எழுந்த புகார் தொடர்பான விவகாரத்தில், ராஜஸ்தான் முதல்வர் அசோக் கெலாட்டின் சகோதரர் அக்ரசன் கெலாட்டிற்கு சொந்தமான ராஜஸ்தான் - குஜராத் - மேற்கு வங்கம் உள்ளிட்ட மாநிலங்களில் 16-க்கும் மேற்பட்ட இடங்களில் சிபிஐ அதிகாரிகள் இன்று சோதனை நடத்தினர். ஏற்கனவே இந்த விவகாரத்தில் அமலாக்கத்துறையும் சோதனை நடத்தி இருந்தது.

இதற்கு கடுமையான கண்டனம் தெரிவித்துள்ள காங்கிரஸ் கட்சியினர், `மத்தியில் ஆட்சி செய்யக்கூடிய பாரதிய ஜனதா கட்சி தனது தவறான கொள்கைகளை மூடி மறைப்பதற்காக அரசியல் பழிவாங்கும் நடவடிக்கையாக சிபிஐ மற்றும் அமலாக்கத்துறையை ஏவி வருகிறது. கடந்த மூன்று நாட்களாக டெல்லியில் காங்கிரஸ் கட்சி நடத்தும் போராட்டங்களுக்கு அசோக் கெலாட் முன்னிலை வகித்து வரும் நிலையில், அவரை முடக்குவதற்காக இப்படி நடந்து கொள்கிறது. காங்கிரஸ் கட்சி இதற்கெல்லாம் பயப்படாது’ என கூறியுள்ளது.

- செய்தியாளர்: நிரஞ்சன்குமார்

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com