கட்டாய விடுப்பை எதிர்த்து அலோக் வர்மா வழக்கு ! 13 அதிகாரிகள் பணியிட மாற்றம்

கட்டாய விடுப்பை எதிர்த்து அலோக் வர்மா வழக்கு ! 13 அதிகாரிகள் பணியிட மாற்றம்
கட்டாய விடுப்பை எதிர்த்து அலோக் வர்மா வழக்கு ! 13 அதிகாரிகள் பணியிட மாற்றம்
Published on

கட்டாய விடுப்பில் அனுப்பப்பட்டதை எதிர்த்து அலோக் வர்மா உச்சநீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்துள்ளார். 

ஊழல் குற்றச்சாட்டு நிலுவையில் உள்ள நிலையில், கட்டாய விடுப்பை ஏற்க முடியாது என அவர் தனது மனுவில் தெரிவித்துள்ளனர். 

பல்வேறு முக்கிய பொறுப்புகளில் பதவி வகித்து வந்த அலோக் சர்மா, உச்சமாக கடந்த 2017 ஆம் ஜனவரியில் சிபிஐ இயக்குநராக பொறுப்பேற்றார். 2016 டிசம்பரில் இடைக்கால சிபிஐ இயக்குநராக நியமிக்கப்பட்டிருந்த குஜராத் ஐபிஎஸ் அதிகாரி ராகேஷ் அஸ்தானா அப்போது, இரண்டாம் இடத்தில் சிறப்பு இயக்குநராக நியமிக்கப்பட்டார். வரும் ஜனவரியில் அலோக் வர்மா ஓய்வுப் பெறவுள்ள நிலையில், அவருக்கு அடுத்து ராகேஷ் அஸ்தானா சிபிஐ இயக்குநராக நியமிக்கப்பட உள்ளதாக தகவல்கள் வெளியாகின. இதனையடுத்து, மத்திய புலனாய்வு அமைப்பான சிபிஐயின் இயக்குநர் அலோக் வர்மாவுக்கும், சிறப்பு இயக்குநர் ராகேஷ் அஸ்தானாவுக்கும் இடையே மோதல் போக்கு நிலவி வந்தது. 

ராகேஷ் அஸ்தானா மீது தொடக்கத்தில் சில ஊழல் புகார்கள் எழுந்ததை சுட்டிக்காட்டி, அவருக்கு சிபிஐ சிறப்பு இயக்குநர் பதவி வழங்க தொடக்கத்திலேயே எதிர்ப்பு தெரிவித்தார். சிபிஐயின் இயக்குநராக இருக்கும் அலோக் வர்மா, லாலு பிரசாத் யாதவ் தொடர்புடைய ஐஆர்சிடிசி வழக்கு உள்ளிட்ட முக்கிய வழக்குகளின் விசாரணையை தடுக்க முயற்சிப்பதாக சிபிஐயின் சிறப்பு இயக்குநர் ராகேஷ் அஸ்தானா மத்திய ஊழல் தடுப்பு ஆணையருக்கு கடிதம் எழுதி இருந்தார். அப்போது, அந்த கடிதம் பரபரப்பாக பேசப்பட்டது. ஆனால், ராகேஷ் அஸ்தானா மீதே பல்வேறு வழக்குகளில் புகார் இருப்பதாக சிபிஐ தரப்பில் அறிக்கை வெளியிடப்பட்டது. இதுதொடர்பாக இரண்டு மாதங்களுக்கு முன்பு சிபிஐ இயக்குநர் அலோக் வர்மா கேபினேட் செயலாளருக்கு புகார் கடிதம் எழுதியிருந்தார். 

பின்னர், டெல்லியை சேர்ந்த இறைச்சி ஏற்றுமதியாளரான மொயின் குரேஷி மோசடி வழக்கில் ராகேஷ் அஸ்தானா சிக்கினார். மொயின் குரேஷி மீதான மோசடியை மூடி மறப்பதற்காக ரூ.2 கோடியை அவர் லஞ்சம் பெற்றதாக, இடைத்தரகர் மனோஜ் குமார் நீதிமன்றத்தில் வாக்குமூலம் அளித்தார். இத்தகைய நிலையில், மொயின் குரேஷி மீதான மோசடி புகாரை மறைக்கும் நோக்கில் அவரிடம் இருந்து ரூ2 கோடியை லஞ்சம் பெற்றதாக ராகேஷ் அஸ்தானா மற்றும் அவருடன் பணியாற்றும் சில அதிகாரிகள் மீது சமீபத்தில் எஃப்.ஐ.ஆர் பதிவு செய்யப்பட்டது.

நாட்டின் முக்கிய புலனாய்வு அமைப்பான சிபிஐ-யில் முதல் இரண்டு இடங்களில் உள்ள அதிகாரிகள் இப்படி பரஸ்பரம் ஒருவரை ஒருவர் குற்றம்சாட்டு முக்கிய பிரச்னையாக மாறியது. ராகேஷ் அஸ்தானா மீது வழக்கு பதிவு செய்யப்பட்டதை அடுத்து, இரு தினங்களுக்கு முன் சிபிஐ தலைமை அலுவலகத்திலேயே சிபிஐ அதிகாரிகள் சோதனை நடத்தி, போலீஸ் துணை கண்காணிப்பாளர் தேவேந்திர குமாரை கைது செய்தனர். இதனையடுத்து, பனிப்போரில் ஈடுபட்டுள்ள சிபிஐ அதிகாரிகள் அலோக் வர்மா, ராகேஷ் அஸ்தானாவை பிரதமர் மோடி நேரில் அழைத்து தனித்தனியாக சந்தித்தார். அப்போது, பிரதமர் மோடியிடம் இருவரும் மாறிமாறி குற்றச்சாட்டுக்களை முன் வைத்ததாக கூறப்படுகிறது.

அலோக் வர்மா, ராகேஷ் அஸ்தானா மீது பரஸ்பரம் குற்றச்சாட்டுகள் எழுந்த நிலையில், இருவரும் கட்டாய விடுப்பில் அனுப்பி வைக்கப்பட்டனர். அலோக் வர்மா கட்டாய விடுப்பில் அனுப்பி வைக்கப்பட்ட நிலையில், சிபிஐயின் தற்காலிக இயக்குநராக நாகேஸ்வர் ராவை மத்திய அரசு நியமித்தது. 

இதனிடையே, ரூ.2 கோடி லஞ்சம் பெற்ற புகாரில் தன்னை கைது செய்ய தடை விதிக்கக் கோரி டெல்லி உயர்நீதிமன்றத்தில் ராகேஷ் அஸ்தானா வழக்கு தொடர்ந்தார். வழக்கு விசாரணையை அக்டோபர் 29 ஆம் தேதிக்கு ஒத்தி வைத்த டெல்லி நீதிமன்றம், அதுவரை ராகேஷ் அஸ்தானாவை கைது செய்ய நேற்று தடை விதித்தது.

இந்நிலையில், கட்டாய விடுப்பை எதிர்த்து அலோக் வர்மா உச்சநீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்துள்ளார். இந்த வழக்கு 26ஆம் தேதி விசாரணைக்கு வருகிறது. இதனிடையே, ராகேஷ் அஸ்தானாவுக்கு எதிரான வழக்கை விசாரித்து வந்த டிஐஜி எம்.கே.சின்ஹா உட்பட 13 சிபிஐ அதிகாரிகள் பணியிட மாற்றம் செய்யப்பட்டுள்ளனர்.

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com