நிரந்தர கணக்கு எண் அட்டையான பான் கார்டில் மூன்றாம் பாலினத்தவர்களான திருநங்கைகளும் சேர்க்கப்பட்டுள்ளனர்.
வங்கிக் கணக்குகளில் பான் கார்டு இல்லாத காரணத்தால் திருநங்கைகள் வருமான வரியை செலுத்த முடியாத நிலை உள்ளது. அவர்களுக்கு அடையாளமாக ஆதார் கார்டு மட்டுமே வழங்கப்பட்டுள்ளது. பான் கார்டு இல்லாத காரணத்தால், திருநங்கைகளால் ஆதார் எண்ணுடன் பான் எண்ணை இணைக்க முடியவில்லை.
இதற்கு தீர்வு காணும் வகையில், பான் கார்டு விண்ணப்பிக்கும் முறையில் மத்திய அரசு திருத்தம் கொண்டுவந்துள்ளது. இதன்படி பான் விண்ணப்பத்தில் ஆண், பெண் மற்றும் மூன்றாம் பாலினம் சேர்க்கப்படுகிறது. இதனால் திருநங்கைகளும் பான் கார்டு பெற்று, வருமான வரி செலுத்த முடியும். மேலும் பான் கார்டை, ஆதார் கார்டுடன் வரும் ஜூன் 30ஆம் தேதிக்குள் இணைக்க வேண்டும் என்றும் மத்திய அரசு தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.