மாட்டிறைச்சி தடை பரிசீலிக்கப்படும்: மத்திய அமைச்சர் ஹர்ஷவர்தன் தகவல்

மாட்டிறைச்சி தடை பரிசீலிக்கப்படும்: மத்திய அமைச்சர் ஹர்ஷவர்தன் தகவல்
மாட்டிறைச்சி தடை பரிசீலிக்கப்படும்: மத்திய அமைச்சர் ஹர்ஷவர்தன் தகவல்
Published on

விலங்குகள் வதை தடுப்புச் சட்டத்தின் கீழ் கொண்டு வரப்பட்டுள்ள இறைச்சிக்காக மாடுகள்
விற்பனை செய்ய தடை, மக்களின் உணவுப் பழக்கத்தில் எந்த பாதிப்பையும் ஏற்படுத்தாது என்று
மத்திய விலங்குகள் நலத்துறை அமைச்சர் ஹர்ஷவர்தன் தெரிவித்துள்ளார்.

பசு, காளை, எறுமை, ஒட்டகங்களை இறைச்சிக்காக விற்கவும், வாங்கவும் மத்திய அரசு கடந்த
மே மாதம் தடை விதித்தது. இதற்கு எதிர்ப்புத் தெரிவித்து நாடுமுழுவதும் போராட்டங்கள்
நடத்தபட்டு வருகின்றன.

இதுகுறித்து டெல்லியில் கருத்துத் தெரிவித்துள்ள ஹர்ஷவர்தன் கூறுகையில், இறைச்சிக்காக
சந்தைகளில் மாடுகளை விற்பனை செய்யப்படுவதை தடுக்கும் விதிமுறையால் மாட்டிறைச்சி
உண்பவர்களுக்கு எந்த பாதிப்பும் ஏற்படாது. கால்நடைகளை இறைச்சிக்காக பயன்படுத்துவதை
கட்டுப்படுவதற்காக கொண்டு வரப்பட்டுள்ள இந்த விதிமுறைகள் தவறாக புரிந்து
கொள்ளப்பட்டுள்ளது. மாட்டிறைச்சி தடை என்பது மத்திய அரசின் கவுரவப்பிரச்னை இல்லை.
எந்தவொரு சமுதாயத்தையோ, உணவுப்பழக்க வழக்கத்தையோ இறைச்சித் தொழிலையோ
குறிவைத்து அரசாணை வெளியிடப்படவில்லை. இந்த விவகாரம் தொடர்பாக பொதுமக்கள்
தங்கள் கருத்துகள், பரிந்துரைகளை மத்திய அரசிடம் சமர்ப்பிக்கலாம். அவற்றை மத்திய அரசு
பரிசீலிக்க தயாராக உள்ளது என அவர் தெரிவித்தார்.

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com