முல்லை பெரியாறு அணைக்கு அத்துமீறி சென்றதாக கேரளாவைச் சேர்ந்த 4 பேர் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது.
கேரள காவல்துறையில் பணியாற்றி ஓய்வுபெற்ற ரஹீம், அப்துல் சலாம், டெல்லி காவல்துறையில் பணியாற்றும் கேரளாவைச் சேர்ந்த ஜான் மற்றும் அவரது மகன் வர்கீஸ் ஆகியோர், கடந்த ஞாயிறன்று தேக்கடியிலிருந்து படகில் சென்றுள்ளனர். பாதுகாக்கப்பட்ட முல்லை பெரியாறு அணைப் பகுதியில் அவர்கள் தடையை மீறி நுழைந்ததாக, அணை காவல் நிலைய அதிகாரிகள் வழக்குப்பதிவு செய்துள்ளனர்.
அந்தப் படகில் தமிழ்நாடு பொதுப்பணித்துறையினர் இருந்ததாகக் குற்றம்சாட்டும் காவல்துறையினர், இதுபற்றி விசாரித்தனர். தாங்கள் யாரையும் அழைத்துச் செல்லவில்லை என தமிழ்நாடு பொதுப்பணித்துறையினர் மறுத்துள்ளனர். ஆனால் அணைப்பகுதியில் அத்துமீறி நுழைந்த படகு தமிழகத்தைச் சேர்ந்தது என்றும், தமிழக பொதுப்பணித்துறை அதிகாரிகள் துணையின்றி அவர்கள் அங்கு சென்றிருக்க முடியாதென காவல் துறையினர் கூறுகின்றனர்.