மூடா முறைகேடு விவகாரம் - கர்நாடக முதல்வர் சித்தராமையா உள்பட 5 பேர் மீது வழக்குப்பதிவு

மூடா முறைகேடு விவகாரம் தொடர்பாக, கர்நாடக முதல்வர் சித்தராமையா, அவரது மனைவி பார்வதி உள்ளிட்ட 5 பேர் மீது வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது.
சித்தராமையா
சித்தராமையா@siddaramaiah | Twitter
Published on

செய்தியாளர்: ம.ஜெகன்நாத்

மூடா முறைகேடு விவகாரம் தொடர்பாக, கர்நாடக முதல்வர் சித்தராமையா, அவரது மனைவி பார்வதி, மைத்துனர் மல்லிகார்ஜுனா, நிலம் விற்ற தேவராஜ் ஆகியோர் மீது வழக்குப் பதிவு செய்யும்படி, லோக் ஆயுக்தா போலீசாருக்கு, பெங்களூரு மக்கள் பிரதிநிதிகள் சிறப்பு நீதிமன்றம் நேற்று முன்தினம் உத்தரவிட்டது.

மூடா முறைகேடு விவகாரம்
மூடா முறைகேடு விவகாரம்pt desk

இதையடுத்து மைசூர் லோக் ஆயுதா மாவட்ட காவல் கண்காணிப்பாளர் யுதேஷ் நேற்று, பெங்களூருவில் உள்ள லோக் ஆயுக்தா தலைமை அலுவலகத்தில், ஐ.ஜி., சுப்பிரமணீஸ்வரர் ராவுடன் ஆலோசனை நடத்தினார். அப்போது எந்த சட்டப்பிரிவின் கீழ் முதல்வர் மீது வழக்குப்பதிவு செய்வது என்பது குறித்து ஆலோசனை நடத்தினர். ஜூலை 1-ஆம் தேதி முதல் புதிய சட்டம் பி.என்.எஸ்.எஸ் அமலில் உள்ளது. இதனால் பிஎன்எஸ்எஸ் அல்லது பழைய சட்டம் சி.ஆர்.பி.சி சட்டத்தின் கீழ் வழக்குப் பதிவு செய்வதா என ஆலோசனை நடத்தினர்

சித்தராமையா
கரூர்: பிணையில் விடுவிக்கப்பட்ட செந்தில் பாலாஜி – 5,000 பேருக்கு பிரியாணி வழங்கிய திமுக தொழிலதிபர்

இதையடுத்து இன்று சிறப்பு நீதிமன்ற உத்தரவுபடி, பழைய சிஆர்பிசி சட்ட பிரிவில் வழக்குப்பதிவு செய்ய லோக் ஆயுக்தா ஏடிஜிபி தெரிவித்த நிலையில், மைசூர் லோக் ஆயுக்தா மாவட்ட காவல் கண்காணிப்பாளர் யுதேஷ் இன்று முதல்வர் சித்தராமையா யு1, அவரது மனைவி பார்வதி யு2, மைத்துனர் மல்லிகார்ஜுனா யு3, நிலம் விற்ற தேவராஜ் யு4, மற்றவர்கள் யு 5 இவர்கள் மீது ஊழல் தடுப்பு 1988 படி 120பி, 166, 403, 420, 426, 465, 468, 340, 351 ஆகிய பிரிவின் கீழ் மைசூர் லோக் ஆயுக்தாவில் வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது.

மூடா முறைகேடு விவகாரம்
மூடா முறைகேடு விவகாரம்pt desk
சித்தராமையா
ஜாமீன் கோரி மகா விஷ்ணு தாக்கல் செய்த மனு: காவல்துறை பதிலளிக்க நீதிமன்றம் உத்தரவு

மூடா எனும் மைசூரு மேம்பாட்டு ஆணையம், முதல்வர் சித்தராமையாவின் மனைவி பார்வதிக்கு, 14 வீட்டு மனைகள் ஒதுக்கியது. இதில், முதல்வர் முறைகேடு செய்துள்ளதாகவும், பல கோடி ரூபாய் வரை முறைகேடு நடந்துள்ளதாகவும், இதில், அதிகார துஷ்பிரயோகம் செய்து, முதல்வர் சித்தராமையா, முறைகேட்டில் ஈடுபட்டதாகவும் மைசூரைச் சேர்ந்த சமூக ஆர்வலர் ஸ்நேகமயி கிருஷ்ண தொடர்ந்த வழக்கில் வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com