‘மயில் கறி சமைப்பது எப்படி?’ - வீடியோ வெளியிட்ட தெலங்கானா யூடியூபர் மீது வழக்குப்பதிவு!

தனது யூடியூப் சேனலில், ‘மயில் கறி சமைத்து சாப்பிடுவது எப்படி’ என வீடியோ வெளியிட்ட தெலங்கானா யூடியூபர் மீது வனவிலங்கு பாதுகாப்பு சட்டத்தின்கீழ் வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது.
பிரணாய் குமார்
பிரணாய் குமார்எக்ஸ் தளம்
Published on

இன்றைய தேதியில் எந்தச் செய்திகளையாவது பற்றி அறிய வேண்டுமா அல்லது காண வேண்டுமா, யூ-டியூப் பக்கம் சென்றால் போதும்... அனைத்தும் இணையத்தை மொய்த்து நிற்கும். அதிலும் ஆர்வக்கோளாறில் சற்றும் பின்விளைவுகளைப் பற்றி யோகிக்காமல் சர்ச்சைக்குரிய கன்டென்டுகள், தனிமனித தாக்குதல் என அனைத்தையும் யூடியூபில் பதிவேற்றி சிலர் வைரலாக்கி வருகின்றனர். அந்தவகையில் தெலங்கானாவைச் சேர்ந்த யூடியூபர் ஒருவர், ‘பாரம்பரிய முறையில் மயில் கறி சாப்பிடுவது’ என்ற வீடியோவைப் பதிவிட்டு சர்ச்சையில் சிக்கியுள்ளார்.

தெலங்கானா மாநிலம் சிர்சில்லாமாவட்டம் தங்கலப்பள்ளியை சேர்ந்தவர் பிரணாய் குமார். இவர், தன்னுடைய யூடியூப் சேனலில் பாரம்பரிய உணவுகளை எப்படிச் சமைத்துச் சாப்பிடுவது என்பது குறித்து வீடியோக்களைப் பதிவேற்றி வருவதாகக் கூறப்படுகிறது. அந்த வகையில் சமீபத்தில் ’மயில் கறி சமைப்பது எப்படி’ என வீடியோ தயாரித்து வெளியிட்டுள்ளார்.

இதையும் படிக்க: தங்கம் வென்ற பாகிஸ்தான் வீரருக்கு எருமை மாடு பரிசு.. யார் வழங்கியது? சுவாரசியமான பின்னணி!

பிரணாய் குமார்
‘பாஸ்போர்ட், விசா வேண்டாம்; இந்தியாவிற்கு சட்டவிரோதமாக நுழைவது எப்படி?’ யூடியூபரின் சர்ச்சை வீடியோ!

இந்த தகவல் கிடைத்ததும், வனத்துறை அதிகாரிகள் குழு தங்கலப்பள்ளி கிராமத்திற்குச் சென்று அவருடைய வீட்டில் இருந்த கறியை மீட்டனர். மேலும், அக்கறியை மாதிரி தடயவியல் ஆய்வுக்காக அனுப்பிவைத்துள்ளனர். அவர் மீது வனவிலங்கு பாதுகாப்பு சட்டத்தின்கீழ் வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது. இந்த விவகாரத்திற்குப் பிறகு பிரணாய், மயில் கறி வீடியோவை தனது யூடியூப் சேனலில் இருந்து நீக்கியுள்ளார்.

பரிசோதனையில் மயில் இறைச்சி இருப்பது உறுதியானால், பிரணாய் மீது கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும் என ராஜண்ணா சிர்சில்லா எஸ்பி அகில் மகாஜன் தெரிவித்துள்ளார். இதற்கு முன்னதாக காட்டுப் பன்றி கறி சமையல் வீடியோவையும் பிரணாய் பதிவிட்டிருந்தது குறிப்பிடத்தக்கது. மயில் நமது தேசியப் பறவையாகக் கருதப்படுகிறது. அதை வேட்டையாடுவது குற்றச்செயலாகும். மயில்கள், வனவிலங்கு பாதுகாப்பு திருத்தச் சட்டம், 2022இன் கீழ் பாதுகாக்கப்படுகிறது.

இதையும் படிக்க:  மனுபாக்கர் - நீரஜ் சோப்ரா இணைந்து பேசிய வீடியோ வைரல்.. திருமணம் செய்ய முடிவா? உண்மை என்ன?

பிரணாய் குமார்
“நீங்க இங்கயும் வந்துட்டீங்களா” ரயில்வே தண்டவாளத்தில் பாம்பு வெடி.. யூடியூபர் செய்த அட்டூழியம்!

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com