ஏராளமான விளம்பரங்களை போட்டு திரைப்படத்தை தாமதப்படுத்தியதாக ஹைதராபாத்தில் உள்ள திரையரங்கம் ஒன்றின் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது.
ஹைதராபாத்தின் குகாட்பல்லியில் உள்ள மல்டி காம்ப்ளக்ஸ் மால் ஒன்றில் சாய் தேஜா என்பவர் கடந்த அக்டோடர் 8ஆம் தேதி மாலை 4.30 மணிக்கு திரைப்படம் பார்க்க சென்றுள்ளார். ஆனால் அங்கே படம் குறித்த நேரத்தில் ஒளிபரப்பப்படாமல் விளம்பரங்கள் ஒளிபரப்பாகியுள்ளன. இதனால் காலதாமதம் ஏற்பட்டுடுள்ளது. இதனால் அதிருப்தி அடைந்த சாய் தேஜா திரையரங்கத்தின் பொறுப்பாளரிடம் தாமதம் தொடர்பாக கேட்டுள்ளார். ஆனால் விளம்பரங்களால் அதிக வருவாய் கிடைப்பதாக அவரிடம் பொறுப்பாளர் கூறியதாக தெரிகிறது.
இதுதொடர்பாக சாய் தேஜா காவல்நிலையத்தில் புகார் அளித்துள்ளார். அந்தப் புகாரின் அடிப்படையில் தெலங்கானா மாநில சினிமா சட்டப்பிரிவு 1955-ன் படி வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது. இதில் திரையரங்க பொறுப்பாளர் பணியில் இருந்தவர் மீது குற்றச்சாட்டுகள் பதிவு செய்யப்பட்டிருக்கின்றன.