கேரளாவில் கட்டுப்பாட்டை இழந்து சாலையில் அதிவேகமாக சீறிய கார் பள்ளத்தில் பாய்ந்ததில் 3 பேர் உயிரிழந்தனர்.
கொல்லம் பகுதியைச் சேர்ந்த ஒரு குடும்பத்தினர் காரில் சென்று கொண்டிருந்தபோது, அடூர் - கருவட்டா பகுதியில் கட்டுப்பாட்டை இழந்துள்ளது. இதில் சாலையில் தாறுமாறாக ஓடிய கார், கால்வாயில் பாய்ந்தது. இதைக் கண்ட பொதுமக்கள், தீயணைப்புத் துறையினரை வரவழைத்து காரையும் அதில் இருந்தவர்களையும் மீட்டனர்.
ஆனால், கால்வாயில் பாய்ந்த காரில் இருந்த 3 பெண்கள் பேர் உயிரிழந்தனர், 4 பேர் படுகாயமடைந்து மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர். கார் கட்டுப்பாட்டை இழந்து அதிவேகமாக பாய்ந்த காட்சிகள் அங்கிருந்த சிசிடிவி கேமராவில் பதிவாகியிருந்தன.