காரை விற்று பெயர் மாற்றாவிட்டால் சிக்கல்: உச்சநீதிமன்றம் கிடுக்கிப்பிடி!

காரை விற்று பெயர் மாற்றாவிட்டால் சிக்கல்: உச்சநீதிமன்றம் கிடுக்கிப்பிடி!
காரை விற்று பெயர் மாற்றாவிட்டால் சிக்கல்: உச்சநீதிமன்றம் கிடுக்கிப்பிடி!
Published on

காரை விற்பனை செய்த பிறகு ஆவணங்களை பெயர் மாற்றம் செய்யத் தவறினால், விபத்துக்கு விற்றவர்தான் பொறுப்பேற்க நேரிடும் என உச்ச நீதிமன்றம் தெரிவித்துள்ளது.

டெல்லியைச் சேர்ந்த விஜயகுமார் என்பவர் தனது காரை 2007ஆம் ஆண்டில் விற்ற நிலையில், ஆவணங்களை பெயர் மாற்றம் செய்யவில்லை. காரை வாங்கியவரும் அதை விற்பனை செய்த நிலையில், கார் மூன்றாவது நபருக்கு கைமாறியது. ஆனால், அதுவரையும் விஜயகுமாரின் பெயரிலான ஆவணங்கள் மாற்றம் செய்யப்படவில்லை. இந்நிலையில், ஓட்டுநர் ஒருவர் காரை இயக்கியபோது ஏற்பட்ட விபத்தில் ஒருவர் உயிரிழந்தார். இதையடுத்து உயிரிழந்தவரின் குடும்பத்தினர் மோட்டார் வாகன விபத்து இழப்பீடு தீர்ப்பாயத்தில் வழக்கு தொடர்ந்தனர். 

அதில் விபத்தை ஏற்படுத்திய ஓட்டுநர் மட்டுமின்றி, காருக்கான ஆவணங்களில் உரிமையாளராக இடம்பெற்றுள்ள விஜயகுமாரும் சேர்ந்து ரூ.3.85 லட்சம் இழப்பீடு வழங்க உத்தரவிடப்பட்டது. காரை விற்று விட்ட நிலையில், இழப்பீடு வழங்க உத்தரவிட்டதை எதிர்த்து உச்ச நீதிமன்றத்தில் விஜயகுமார் மேல்முறையீடு செய்தார். இந்த வழக்கை விசாரித்த நீதிபதிகள், காரை விற்பவர் ஆவணங்களைப் பெயர் மாற்றம் செய்யத் தவறினால், விபத்து உள்ளிட்ட எந்த பிரச்னை நேரிட்டாலும் ஆவணங்களில் உள்ள உரிமையாளரே அதற்கு பொறுப்பேற்க நேரிடும் என்று உத்தரவிட்டது.

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com