சட்டம் ஒழுங்கு பிரச்சனை காரணமாக ரயில்கள் ரத்து செய்வது அதிகரிப்பு

சட்டம் ஒழுங்கு பிரச்சனை காரணமாக ரயில்கள் ரத்து செய்வது அதிகரிப்பு
சட்டம் ஒழுங்கு பிரச்சனை காரணமாக ரயில்கள் ரத்து செய்வது அதிகரிப்பு
Published on

நாட்டில் சட்டம் ஒழுங்கு பிரச்சனை காரணமாக நூற்றுக்கு 8 ரயில்கள் ரத்து செய்யப்படுவதாக நாடாளுமன்றத்தில் மத்திய அரசு தெரிவித்துள்ளது.

ரயில்கள் ரத்து செய்வது தொடர்பாக மத்திய அரசு நேற்று அதிர்ச்சியான தகவல் ஒன்றை தெரிவித்துள்ளது. 2014-16 ஆண்டுகளில் சட்டம் ஒழுங்கு பிரச்சனை காரணமாக நூற்றுக்கு 8 ரெயில்கள் ரத்து ஆவதாக மாநிலங்களவையில் ரயில்வே துறை இணை அமைச்சர் ராஜன் கோகைன் தெரிவித்துள்ளார்.

2014-ம் ஆண்டில் சட்டம் ஒழுங்கு பிரச்சனை காரணமாக ரத்து செய்யப்பட்ட ரயில்களின் எண்ணிக்கை 34 ஆக இருந்தது. இது 2015-ம் ஆண்டில் 540-ஆக உயர்ந்தது. பின்னர் 2016-ம் ஆண்டில் 1149-ஆக கிடுகிடுவென உயர்ந்துள்ளதாகவும் அமைச்சர் குறிப்பிட்டுள்ளார். 2014, 2015 மற்றும் 2016-ம் ஆண்டுகளில் ரத்து செய்யப்பட்ட ரயில்களின் என்ணிக்கை முறையே 2679, 8605, 9235 ஆகும். 

அதேபோல், வேறுபாதைக்கு மாற்றிவிடப்பட்ட ரெயில்களின் எண்ணிக்கை 2014, 2015 மற்றும் 2016-ம் ஆண்டுகளில் முறையே 4056, 3585 மற்றும் 4048 ஆகும். சட்டம் ஒழுங்கு பிரச்சனை அல்லாமல் மோசமான வானிலை, தாமதம், விபத்து, கட்டுமானம் மற்றும் பராமரிப்பு வேலை காராணமாக ரயில்கள் ரத்து செய்யப்படுவதாகவும் அமைச்சர் ராஜன் கோகைன் தெரிவித்துள்ளார்.

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com