குலாப் ஜாமுனை கண்டு அலறி ஓடும் ஸ்வீட் பிரியர்கள்.. காரணம் என்ன? வைரல் வீடியோ!

குலாப் ஜாமுனை கண்டு அலறி ஓடும் ஸ்வீட் பிரியர்கள்.. காரணம் என்ன? வைரல் வீடியோ!
குலாப் ஜாமுனை கண்டு அலறி ஓடும் ஸ்வீட் பிரியர்கள்.. காரணம் என்ன? வைரல் வீடியோ!
Published on

நொறுக்குத்தீனிகள், சாட் வகைகளுக்கு பிரபலமான வட இந்தியாவிலேயே அண்மைக் காலமாக விநோதமான உணவு பண்டங்கள் விற்கப்பட்டு வருவது உணவு பிரியர்களையே முகம் சுழிக்கச் செய்திருக்கிறது.

அந்த வகையில் சாக்லேட் ஐஸ்க்ரீமில் சீஸை தூவி சாண்ட்விச் செய்தது போன்று இனிப்பு பிரியர்களையும் சாட் வியாபாரிகள் கடுப்பேற்றியிருக்கிறார்கள்.

அனைவருக்குமே பிடித்தமான இனிப்பு வகையான குலாப் ஜாமூனை சாட் வகையாக சாப்பிட்டால் எப்படி இருக்கும்? அதுவும் புளிப்பு சட்னி, தயிர் இவற்றையெல்லா சேர்த்தால் எப்படி இருக்கும்?

அப்படியான வீடியோவை பார்த்துதான் நெட்டிசன்கள் பலரும் கலங்கி போயிருக்கிறார்கள். அந்த வீடியோவில் சாட் கடைக்காரர் ஒருவர், தட்டில் 4 குலாப் ஜாமுன்களை வைத்து அதன் மீது தயிரை ஊற்றி, அதன் மேல் கெட்சப், புதினா சட்னி, உடைத்த பானி பூரி, மிக்சர், மாதுளை ஆகியவற்றை சேர்த்து புது வகையான சாட்’டாக கொடுக்கிறார்.

சுமார் 24 ஆயிரம் பேருக்கு மேல் பார்க்கப்பட்டு இந்த வீடியோவை பகிர்ந்த இணையவாசிகள், குலாப் ஜாமுனில் இப்படிலாமா செய்வாங்க? இதைவிட மோசமான பண்டம் இருக்குமா? என்றும் இதுமாதிரி குளறுபடியான சாட்கள் செய்வதை நிறுத்துங்கள் என்றும் கதறிக் கொண்டிருக்கிறார்கள்.

ALSO READ: 

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com