உத்தர பிரதேசத்தில் நாளை நடைபெறும் 5-ம் கட்ட வாக்குப்பதிவுக்கான இறுதி கட்ட பரப்புரை நிறைவடைந்துள்ளது.
403 சட்டமன்ற தொகுதிகளை கொண்ட உத்தரபிரதேசத்திற்கு 7 கட்டங்களாக தேர்தல் நடைபெற்று வருகிறது. இதில், அயோத்தி உட்பட 12 மாவட்டங்களில் உள்ள 61 தொகுதிகளுக்கு நாளை வாக்குப்பதிவு நடைபெறுகிறது. இந்த தொகுதிகளுக்கான தேர்தல் பரப்புரை நேற்றுடன் நிறைவடைந்தது.
முன்னதாக பிரதமர் மோடி, முதல்வர் யோகி ஆதித்யநாத், அகிலேஷ் யாதவ், பிரியங்கா காந்தி என முக்கிய தலைவர்கள் இந்த தொகுதிகளில் தீவிர வாக்குசேகரிப்பில் ஈடுபட்டனர். எதிர்பார்ப்பு மிகுந்த அயோத்தியை கைப்பற்றுவதில் பாரதிய ஜனதா மற்றும் சமாஜ்வாதி இடையே கடும் போட்டி நிலவுகிறது. இதனிடையே பதற்றம் நிறைந்த வாக்குச்சாவடிகளில் துணை ராணுவ படையினர் குவிக்கப்பட்டுள்ளனர்.