’ஸ்வீட்டி பேபி’ எனக் கூப்பிட்ட உயரதிகாரி.. தொல்லை தாங்கவில்லை என நீதிமன்றத்தை அணுகிய இளம்பெண்!

இரட்டை அர்த்த சொல்லாடல்களாலும் பெண்கள் பாதிக்கப்படுகின்றனர். அப்படியான பாதிப்புக்குத்தான் இளம்பெண் ஒருவர் ஆளாக்கப்பட்டுள்ளார்.
model image
model imagefreepik
Published on

அனைத்துத் துறைகளிலும் பெண்களின் வளர்ச்சி நாளுக்கு நாள் முன்னேறி வரும் நிலையில், அவர்களுக்கு எதிராக பாலியல் துன்புறுத்தல்களும் அதிகரித்துக் கொண்டே செல்கிறது. ஒருபுறம் உடல்ரீதியான சீண்டல்கள் இருக்கும் நிலையில், மறுபுறம் இரட்டை அர்த்த சொல்லாடல்களாலும் பெண்கள் பாதிக்கப்படுகின்றனர். அப்படியான பாதிப்புக்குத்தான் இளம்பெண் ஒருவர் ஆளாக்கப்பட்டுள்ளார்.

model image
model imagefreepik

கடற்படையில் பயிற்சிக்காக இணைந்திருக்கிறார் அந்த இளம்பெண். அவரது உயரதிகாரி, அந்த இளம்பெண்ணை எப்போதும் பெயர் சொல்லி அழைக்காமல் 'ஸ்வீட்டி பேபி' என்றே அழைத்துள்ளார். எப்போதுமே இதே பெயரில் உயரதிகாரி அழைத்ததால், இதன் காரணமாக அந்த இளம்பெண் மனதளவில் பாதிக்கப்பட்டுள்ளார். மேலும், “ ’ஸ்வீட்டி பேபி’ என்று தன்னை கூப்பிட வேண்டாம்” என அந்தப் பெண்ணும் எச்சரித்துள்ளார். ஆனாலும் அவர் கேட்கவில்லை. இதனால் கடுப்பான அந்தப் பெண், ”எத்தனையோ முறை ’ஸ்வீட்டிபேபி’ என்று தன்னை அழைக்க வேண்டாம் என்று சொல்லியும், உயரதிகாரி நிறுத்துவதில்லை, அதனால், அவர் மீது பாலியல் துன்புறுத்தல் வழக்குப் பதிவு செய்ய வேண்டும்” என கொல்கத்தா உயர்நீதிமன்றத்தில் மனுத் தாக்கல் செய்தார்.

இதையும் படிக்க: ”இந்தியா வழங்கிய விமானத்தை இயக்கும் திறன்கொண்ட விமானிகள் எங்களிடம் இல்லை” - மாலத்தீவு அமைச்சர்

model image
“பாலியல் குற்றச்சாட்டு புகார்களுக்கு உடனடி நடவடிக்கை தேவை”- சென்னை உயர்நீதிமன்றம்

இந்த மனுவானது நீதிபதி சப்யசாச்சி பட்டாச்சார்யா முன்பு விசாரணைக்கு வந்தது. அப்போது கடற்படை உயரதிகாரி, ” ‘ஸ்வீட் பேபி’ என்ற வார்த்தையைப் பாலியல்ரீதியாகப் பயன்படுத்தவில்லை. ’அப்படிக் கூப்பிட்டால் தனக்குப் பிடிக்கவில்லை’ என்று அந்தப் பெண் சொன்னபிறகு, ஒருபோதும் அதன் வார்த்தையை, தான் பயன்படுத்தவில்லை” என்றார்.

இருதரப்பு வாதங்களையும் கேட்ட நீதிபதி, "பேபி அல்லது ஸ்வீட்டி இப்படியான வார்த்தைகளால் அழைப்பது பாலியல் துன்புறுத்தலின்கீழ் அடங்காது. பாலியல் துன்புறுத்தல் என்று சொல்லாடலும் பொருத்தமற்றது. இன்றைய சமூகச் சூழலில், இப்படியான வார்த்தைகள் எல்லாம் சர்வசாதாரணமாக பயன்படுத்தக்கூடியவைதான்.. இந்த வார்த்தைகளுக்கு பாலியல் சாயம்பூசத் தேவையில்லை. இப்படி ஒவ்வொரு வார்த்தைக்கும் அர்த்தம் கண்டுபிடித்து, பாலியல் துன்புறுத்தல் புகார்களை கொண்டுவந்தால், அது பெண்களை பாதுகாக்கும் சட்டங்களுக்கே எதிரானதாக மாறிவிடும். மேலும், சம்பந்தப்பட்ட பெண், இப்படியான வார்த்தைகளை தன்னிடம் பயன்படுத்த வேண்டாம், ’தனக்கு அசௌகரியமாக இருக்கிறது’ என்று சொன்னபிறகு, அதுபோன்ற வார்த்தைகளைப் பயன்படுத்துவதை நிறுத்தியதாக எதிர்தரப்பும் தெரிவித்துள்ளது. ஆகையால் இந்த வழக்கை தள்ளுபடி செய்கிறேன்” எனச் சொல்லி உத்தரவிட்டார்.

இதையும் படிக்க: உடுமலை: சிறுமிக்கு நேர்ந்த கொடுமை - பரிசோதனையில் வெளியான அதிர்ச்சி தகவல்... 9 பேர் போக்சோவில் கைது

model image
’நீ அழகாக இல்லையே’ பாலியல் வன்கொடுமை புகாரளிக்க சென்ற சிறுமியிடம் போலீஸ் அதிகாரி பேச்சு..!

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com