இன்று தொடங்க உள்ள நாடாளுமன்ற பட்ஜெட் கூட்டத்தொடரில் ரஃபேல் போர் விமான கொள்முதல் குறித்த தலைமை கணக்கு அதிகாரியின் அறிக்கை தாக்கல் செய்யப்படும் எனத் தகவல் வெளியாகியுள்ளது.
பிரான்ஸ் நாட்டிடம் இருந்து ரஃபேல் விமானங்களை வாங்கியதில் முறைகேடு நடைபெற்றுள்ளதாக காங்கிரஸ் உள்ளிட்ட எதிர்க்கட்சிகள் குற்றஞ்சாட்டி வருகின்றன. மக்களவை தேர்தலிலும் ரஃபேல் விவகாரம் முக்கிய விவாதப் பொருளாக வாய்ப்புள்ளதாக கருதப்படுகிறது. இந்நிலையில் இன்று தொடங்க உள்ள நாடாளுமன்ற பட்ஜெட் கூட்டத்தொடரில் ரஃபேல் போர் விமான கொள்முதல் குறித்த தலைமை கணக்கு அதிகாரியின் அறிக்கை தாக்கல் செய்யப்படும் எனத் தகவல் வெளியாகியுள்ளது.
இதில் ரஃபேல் விமானம் வாங்குவதற்கு சரியான நடைமுறைகள் பின்பற்றப்பட்டுள்ளதா இல்லையா என்பது குறித்த விவரங்கள் மட்டுமே இருக்கும் என்று தெரிகிறது. ரஃபேல் விமானத்தின் விலை குறித்த தகவல்கள் ரகசியம் கருதி இந்த அறிக்கையில் இடம் பெறாது என்றும் கூறப்படுகிறது.