யாருக்கு என்ன இலாக்கா..! - முழுத் தகவல்

யாருக்கு என்ன இலாக்கா..! - முழுத் தகவல்
யாருக்கு என்ன இலாக்கா..! - முழுத் தகவல்
Published on

நரேந்திர மோடி நாட்டின் பிரதமராக இரண்டாவது முறையாக நேற்று பதவியேற்றுக் கொண்டார். மோடியை அடுத்து ராஜ்நாத் சிங், அமித்ஷா,நிதின்கட்கரி, நிர்மலா சீதாராமன் உள்ளிட்டோரும் பதவியேற்றனர். மோடி தலைமையிலான அமைச்சரவையில் 25 கேபினேட் அமைச்சர்கள், 24 இணையமைச்சர்கள், தனிப்பொறுப்புடன் கூடிய 9 அமைச்சர்கள் பதவியேற்றுக் கொண்டனர். இதில் பல்வேறு புதுமுகங்களும் இடம்பெற்றுள்ளனர். சிவசேனா, அகாலிதளம் உள்ளிட்ட கூட்டணிகளுக்கும் அமைச்சர் பொறுப்புகள் வழங்கப்பட்டன. இந்நிலையில் நேற்று அமைச்சர்களாக பதவியேற்றவர்களுக்கு இன்று பொறுப்புகள் வழங்கப்பட்டன

  • பிரதமர் மோடி -  பணியாளர் துறை, ஓய்வூதியம் மற்றும் பொதுமக்கள் குறைகேட்பு, அணுசக்தி, விண்வெளி
  • ராஜ்நாத் சிங் - பாதுகாப்புத்துறை
  • அமித்ஷா - உள்துறை
  • நிதின் கட்கரி - சாலைபோக்குவரத்து , நெடுஞ்சாலை, சிறு, குறு மற்றும் நடுத்தர நிறுவனங்களின் அமைச்சகம்
  • நிர்மலா சீதாராமன் - நிதியமைச்சர் 
  • சதானந்தா கவுடா - ரசாயனம் மற்றும் உரத்துறை
  • ஜெய்சங்கர் - வெளியுறவுத்துறை
  • ராம்விலாஸ் பஷ்வான் - நுகர்வோர் விவகாரங்கள், உணவு மற்றும் பொது விநியோகம்
  • நரேந்திர சிங் தோமர் - வேளாண் மற்றும் விவசாய நலன் மற்றும் ஊரக மேம்பாடு
  • ஸ்மிரிதி இரானி - மகளிர் மற்றும் குழந்தை மேம்பாடு
  • ரவிசங்கர் பிரசாத் - சட்டம் மற்றும் நீதி, மின்னணு மற்றும் தகவல் தொழில்நுட்பம்
  • கர்ஷிம்ராட் கார் படால் - உணவு பதப்படுத்தும் தொழிற்சாலை அமைச்சகம்
  • தாவர் சந்த் கெலாட் - சமூக நீதி மற்றும் அதிகாரமளித்தல்
  • முக்தார் அப்பாஸ் நக்வி - சிறுபான்மை விவகாரங்கள் அமைச்சகம்
  • பியூஸ் கோயல் - ரயில்வே, வர்த்தகம், தொழில் துறை
  • ஹர்ஷ்வர்தன் - சுகாதாரத்துறை
  • பிரகாஷ் ஜவடேகர் - மத்திய சுற்றுச்சூழல், தகவல் ஒலிபரப்பு
  • அர்ஜூன் முண்டே - பழங்குடியினர் விவகாரங்கள் அமைச்சகம்
  • ரமேஷ் போக்ரியால் - மனித வள மேம்பாட்டு அமைச்சகம்
  • தர்மேந்திர பிரதான் - பெட்ரோலிய மற்றும் இயற்கை எரிவாயு அமைச்சகம்
  • பிரல்கேட் ஜோஷி - நாடாளுமன்ற விவகாரம், நிலக்கரி மற்றும் சுரங்கம்
  • மகேந்திர நாத் பாண்டே - திறன் அபிவிருத்தி மற்றும் தொழில்முனைவு அமைச்சகம்
  • அரவிந்த கணபத் ஷவாந்த் - கனரக தொழில் மற்றும் பொது நிறுவனங்கள்
  • கிரிராஜ் சிங் - கால்நடை பராமரிப்பு, பால் மற்றும் மீன்வளத்துறை
  • கஜேந்திர சிங் - ஜெல் சக்தி

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com