தேசிய மக்கள்தொகை பதிவேட்டை புதுப்பிக்க பிரதமர் மோடி தலைமையிலான கூட்டத்தில் முடிவு செய்யப்பட்டுள்ளது.
பிரதமர் நரேந்திர மோடி தலைமையில் இன்று நடைபெற்ற மத்திய அமைச்சரவைக் கூட்டத்தில் பல்வேறு விவகாரங்களுக்கு ஒப்புதல் அளிக்கப்பட்டது. அதில், தேசிய மக்கள் தொகை பதிவேட்டை புதுப்பிக்கும் பணிக்காக ரூ.8500 கோடி நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.
இதுகுறித்து செய்தியாளர்களிடம் பேசிய மத்திய அமைச்சர் பிரகாஷ் ஜவடேகர், “மக்கள் தொகை பதிவேடு தொடர்பாக யாரும் அச்சப்பட தேவையில்லை” என தெரிவித்துள்ளார். அத்துடன், மக்கள்தொகை கணக்கெடுப்புக்கு எவ்வித ஆவணங்களோ, பயோமெட்ரிக்கோ தேவையில்லை என்று அவர் தெரிவித்தார். அடுத்த ஆண்டு ஏப்ரல் முதல் செப்டம்பர் மாதம் வரை இந்த கணக்கெடுப்பு நடைபெறும் என கூறப்பட்டுள்ளது.